Wednesday, November 9, 2011

ஊருக்கு புதியவன்!


விழிக்கிறான்,முழிக்கிறான்

யாரிடம் கேட்பது

எவர் சொல்வார்கள்

சரியாய் சொல்வார்களா

சந்தேகத்தோடு வினவுகிறான்!

வழி நெடுகிலும்,விழிகளை விரித்து

நான் இறங்க வேண்டிய இடம்

வந்தால் மறக்காமல் சொல்லுங்கள்

என்று நொடிக்கொருமுறை சொல்கிறான்!

திசை தெரியல எது கிழக்கு

எது மேற்கு ?

எந்தப்பக்கம் போகவேண்டும்

இடதா,வலதா ?

அதற்கு அருகாமையிலா

பக்கவாட்டிலா?

புது கட்டிடமா

பழைய கட்டிடமா ?

பலமுறை கேட்கிறான்

எல்லாப்பக்கமும் சுற்றி

வந்த இடத்திலே வந்து நிற்கிறான்

உலகம் உருண்டை என்கிற

கூற்றை உண்மையாக்கி

ஊருக்கு புதியவன்!

Widget byLabStrike


No comments:

Post a Comment