Monday, October 24, 2011

மாசுபட்ட மனங்கள்!



மூக்கைப்பிடித்தபடி முந்துகின்றன

கால்கள்!

காறி உமிழ்ந்தபடி கடக்கின்றன

கார்கள்!

விரைந்து முந்தி வேகமெடுக்கின்றன

வண்டிகள்!

குப்பைக்கொட்டி விட்டு குறை கூறுகின்றன

குணங்கள் !

நாறி இருக்கும் நாட்டை காறி உமிழும்

மனங்கள் இன்னும் எச்சமாக்குகின்றன!

அவன் மட்டும் அமைதியாய்

நாற்றத்தைப் பற்றி கவலைக்கொள்ளாது

நாட்டினை தூய்மைப்படுத்திக் கொண்டு

மாநகராட்சி குப்பை வண்டியில்!

Widget byLabStrike


No comments:

Post a Comment