Thursday, September 22, 2011

செருப்புக்கடைக்கு முன்னால்!




  • உன்னை முதன் முதலாய்


பார்க்க வருகிறேன்

நீ சொன்ன செருப்புக்கடைக்கு

முன்னால்!

  • நீ சொன்ன அடையாளம்


எனக்கு ஓர் அபாயத்தை

உணர்த்திக்கொண்டிருந்தது

ஏதேனும்

பிய்யப் போகிறதோ என்று!

  • அழைத்த நீ அழகாய் சொல்கிறாய்


என்னிடம்..

எம் அகம் புகுந்தவனே

நீ என்னை மிதித்தாலும்

உன்னை காக்க

செருப்பாய் இருப்பேனடா

என்று

உன் சீர்மிகு காதலை!

Widget byLabStrike


2 comments:

  1. பயத்தோடு ஆரம்பிக்கும்

    பழகிய பின்பு
    கால் செருப்பாய்
    கன்னியவள்

    ReplyDelete