Tuesday, September 20, 2011

மழைவந்து நனைக்கும் போதெல்லாம் !



  • இருள்கின்ற மேகக்கூட்டம்


எம் இருவருக்குமான

இரவின் நீட்சி!

  • மின்னலென பளிச்சிடும் ஒளியில்


அவள் நோக்கும்

பார்வை வசீகரம்!

  • அவள் வாய்விட்டு


சிரிப்பது போன்று

வந்து ஒலிக்கிற இடியின் சத்தம்!

  • தூரல் வந்து


தொடுகிற போது

அவள் வருடுகின்ற தீண்டலின் ஸ்பரிசம்!

  • மழைவந்து நனைக்கும்


போதெல்லாம்

அவள் வந்து அணைக்கும் சுகம்தான்!

Widget byLabStrike


3 comments: