Wednesday, August 31, 2011

மரண தண்டனை!


குற்றம் செய்த

நபரின் மீது

சட்டம் செய்யும்

குற்றம்!

Widget byLabStrike


4 comments:

  1. தூக்கு: தமிழக தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்று கூறும் மத்திய அரசின் மூக்குடைக்கும் வழி என்ன?

    http://arulgreen.blogspot.com/2011/08/blog-post_5747.html

    ReplyDelete
  2. மரணதண்டனை அரசு செய்யும் குற்றம் தான் நண்பரே!. அரசு தவறினால் நிச்சயம் மக்கள் அந்த தண்டனையை கொடுத்து விடுவார்கள். காந்தியக் கொள்கையில் என்னால் இன்றளவும் ஏற்றுக்கொள்ள இயலாதது இது ஒன்றுதான்.

    நான் சிறுவயதாக இருக்கும் போது தர்மபுரி கல்லூரி மாணவிகளை உயிரோடு பேருந்தில் எரிந்ததை தொலைக்காட்சி பெட்டியில் காட்டினார்கள். இன்றளவும் அவர்களின் மரண ஓசை என் காதுகளில் ஒழித்துக் கொண்டிருக்கிறது. முருகன் உள்ளிட்டோர் தவறாக தண்டிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற வாதத்தினால் அவர்ளுக்காக போராடுவதில் தவறில்லை. அவர்கள் நிரபராதிகள் என்று சட்டத்தின் மூலமே காப்பாற்றிவிட இயலும். ஆனால் உயிரேடு எரித்தவர்களை நிச்சயம் மன்னிக்கும் மனப்பான்மை கூடாது நண்பரே!.

    அது ஆட்டோ சங்கர் போன்ற மாறுபட்ட நபர்களுக்கு ஏதுவாகிவிடும். நம் நாட்டில் சட்ட ஒழுங்கை காப்பாற்றுவது காவல்துறை அல்ல. அவர்கள் எல்லாம் முடிந்த பின்பு வந்து வேடிக்கைப் பார்க்கும் கூட்டம் அவ்வளவுதான். வெளிநாடுகளில் மரணதண்டனை இல்லை என்றால், அவர்களின் நாட்டில் குற்றங்களின் அளவுகள் குறைந்திருக்கின்றன. அதிகப்பட்ச தண்டனைகள் கொடுக்கும் அளவிற்கு அங்கு குற்றங்கள் நடைபெருவதில்லை என்பதும் காரணமாக இருக்கலாம்.

    ஆனால் இங்கு நிலை அப்படியல்ல. சமீபத்தில் ஒரு பெண் குழந்தையை தலையை வெட்டி கிணற்றில் வீசியுள்ளனர். அவர்களின் இந்த செயலுக்கு 14 வருட கடுங்காவல் போதுமானது என்று நீங்கள் கருதுகிறீர்களா. நாம் கருதுவது இருக்கட்டும், அக்குழந்தையின் தாய் தந்தை என்று நினைப்பார்கள். குற்றவாளி அகப்பட்டுக் கொண்டால், சட்டம் என்ன தண்டனை கொடுப்பது என அவர்களே ஆயுதமேந்த மாட்டார்களா.

    இப்படி பாதிக்கப்படும் போது சராசரி மனிதனே ஆயுதமேந்துவதை நிச்சயம் நீங்கள் விரும்பமாட்டீர்கள் என நினைக்கிறேன்.

    - அன்பு நண்பன்,
    ஜெகதீஸ்வரன்.

    ReplyDelete
  3. உங்கள் கருத்தை நானும் ஏற்கிறேன் நண்பா..தண்டனையை இன்னும் கடுமையாக்கலாம்...ஒரு பய உணர்வை
    உண்டு செய்து வைக்கலாம்..

    ReplyDelete
  4. சட்டம் 'அந்த' குற்றத்தை (மரண தண்டனை) கொடுக்காவிட்டால் நாட்டில் குற்றங்கள் பெருகிவிடுமே நன்பா??

    ReplyDelete