Tuesday, July 26, 2011

காதல் அதிசயமே!



என் கண்களுக்கு

உன் உருவைத் தவிர

வேறேதும் தெரியவில்லை!

என் எண்ணங்களுக்கு

உன்னை யோசிப்பதைத் தவிர

வேறேதும் தெரியவில்லை!

என் மூளைக்கு

உன் நினைவைத் தவிர

வேறேதும் தெரியவில்லை!

இப்போ கொஞ்ச நாளாய்

பார்க்கும் பெயர்ப்பலகையெல்லாம்

உன் பெயராய்

மாறியதேன் தெரியவில்லை!

என் கையெழுத்துக்கு

பதிலாய்

உன் பெயரெழுதும்

காரணம் தெரியவில்லை!

உன் கடைக்கண்பார்வை

எனை கடைந்தெடுக்கும்

போதெல்லாம்

மின்சாரம் தாக்கும்

மாயை தெரியவில்லை!

காண்பதெல்லாம் காதலாய்

மாறியதேன்

கண்டுபிடிக்க தெரியவில்லை!

அறிந்தால் நீ சொல்லடி

என் காதல் அதிசயமே!

Widget byLabStrike


4 comments:

  1. அடுத்த காதல் மன்னன் நீங்க தான் போல....

    ReplyDelete
  2. ஆஹா ! ! அருமை...
    என்ன சொல்றது தெரியலை... simply super.......

    ReplyDelete
  3. Yaru andha ponnu ragasiyama yarukum theriyama enkita mattum solunga

    ReplyDelete
  4. கலக்குரீங்க நன்பா...
    எல்லாம் காதல் செய்யும் மாயம்

    ReplyDelete