Monday, July 4, 2011

சமூக வலைப்பின்னலில் சங்கமமாய்!



எங்கேயோ எப்போதோ

தொலைத்த முகங்கள்

காலச்சக்கரத்தில்

கண்ணிமைக்கும் நேரத்தில்

தொலைந்த முகங்கள்

அலைந்து திரிந்து

அட்ரஸ் தேடியும்

அகப்படாத முகங்கள்

பிரியா விடைகொடுத்து

பிரிய மனமின்றி

பிரிந்த முகங்கள்

பிரிவின் வலிதாங்காது

கண்ணீரில் கரைந்த முகங்கள்

கால ஓட்டத்தில் தம் காதல்

கதைகளை மறந்த முகங்கள்

உலகம் சுருங்கி

ஒற்றை முகமாய்

சமூக வலைப்பின்னலில்

இன்று சங்கமமாய்

எல்லோரும்

சிரித்த முகமாய்!

Widget byLabStrike


8 comments:

  1. உங்களின் கவிதைக்கு இனி என்ன சொல்லி பாராட்டுவது
    என்றே தெரியலையே?
    உலகம் சுருங்கி

    ஒற்றை முகமாய்

    சமூக வலைப்பின்னலில்

    இன்று சங்கமமாய்

    எல்லோரும்

    சிரித்த முகமாய்!

    இது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு

    ReplyDelete
  2. ரொம்ப..ரொம்ப நன்றி தோழி!!

    ReplyDelete
  3. ellada paartu parthu alugrenda

    ReplyDelete
  4. apdiyaa..ellorukkum oru feeling..ungalukku oru feeling..

    ReplyDelete