Thursday, June 30, 2011

கடல் மீது கொண்ட காதல்!



  • நெடுநாட்களாய் கடல்பார்க்க


ஆசைக்கொண்டு

கடல் மீது தீராக் காதல்

கொண்டவளாய் நான்!

  • முதன்முதலாய் கடல்


பார்க்க காலம் வந்தது

காதலனே

உன் அருகாமை நின்று!

  • கடலினை பாராது


உன்னையே

பார்த்துக்கொண்டிருக்கிறேன்

கண்ணிமைக்காமல்!

  • அலை வந்து


நனைத்த மணலில்

நம் காதல்

எழுதி வைத்தேன்.

எக்காலம் ஆனாலும்

இக்காதல் அழியாது

என்று!

  • அடுத்தநொடி வந்திட்ட


அலை வந்து

அழிக்கிறது

எழுதிவைத்த நம் காதலை!

  • அலை கொண்ட பொறாமை


என்றப்போ எண்ணிட்டேன்.

அப்புறமாய் அறிந்திட்டேன்

நம் காதல் இடைவெளியில்

எங்கேயோ நீயும்

வெகுதொலைவில் நானும்!

  • நாம் மிதித்த கடலலையை


நான் மட்டும் மிதிக்க மாட்டேன்

நீயும் நானும் சேர்ந்தெப்போ

மிதிப்போமென்று

பசலை நோய் வந்தவளாய்

பார்த்திப்போ காத்திருக்கிறேன்!

  • பறந்து விரிந்த


கடற்பரப்பை

பார்க்க நான் கொண்ட ஆசை

பறந்து நிறைந்த நம்

காதலாலே

பாராமலே போகிறதடா!

Widget byLabStrike


10 comments:

  1. கொஞ்சும் தமிழில் செல்லக் காதல் கவிதை. உண்மை காதல் என்றும் அழியாது(என்று சொல்லுவார்கள்)

    ReplyDelete
  2. •கடலினை பாராது
    உன்னையே

    பார்த்துக்கொண்டிருக்கிறேன்

    mmmm...

    ReplyDelete
  3. நன்றி தோழி ..ஆமாம்.. உண்மை காதல் எப்போதும் அழியாது!

    ReplyDelete
  4. அழகு கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. Nice kavithai......

    www.kavithaicorner.wordpress.com

    ReplyDelete