Thursday, June 9, 2011

அருகில் வராதவரை அனைவரும் தேவதைகளே!



  • தூரத்தே நின்று


முறைப்பவள்

அழகான ராட்சசியாகிறாள்!

  • சண்டைக்காரியானாலும்


துடுக்கு நிறைந்தவளாகவே

எம் உள்ளம் கொய்கிறாள்!

  • வாயாடி செல்பவளும்


கலகலப்பான

கவிதையாகி காட்சி பொழிகிறாள்!

  • கருப்பாய் இருப்பவளும்


கலையாகத்தான்

என் கண்ணில் நிறைகிறாள்!

  • ஈகோ காட்டுபவள்


என் ஏகோபித்த தேர்வில்

முதலிடத்தில் இருக்கிறாள்!

  • ஏனோ


அழகு நிறைந்தவளாய்

எம் அருகிருந்து

புன்னகை தவழ

என்னை

புன்சிரிப்பில் மாய்த்தாலும்

காதல் கொண்ட

காதலியும்

கட்டிக்கொண்ட

மனைவியும் மட்டும்

அழகாய் தெரிவதில்லை!

  • தூரத்தே இருக்கும்வரை


எல்லாப் பெண்களுமே

அழகுதான் !

Widget byLabStrike


11 comments:

  1. உங்க லைவ் சொய்ஸ் நல்லா தான் இருக்கு போங்க.

    ReplyDelete
  2. அப்டியாங்க..ரொம்ப நன்றிங்க..

    ReplyDelete
  3. ஹா....ஹா.....ஹா......பெரும்பாலும் காதலும்,திருமணமும் முறிவை நோக்கி முன்னேற இதுபோன்ற நினைப்புத்தான் காரணம்..

    ReplyDelete
  4. நல்ல கவிதை இரசித்தேன்

    ReplyDelete
  5. மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  6. //ஈகோ காட்டுபவள்

    என் ஏகோபித்த தேர்வில்

    முதலிடத்தில் இருக்கிறாள்!//

    நல்லாயிருக்கு......!

    ReplyDelete
  7. மிக்க நன்றி நண்பரே !!

    ReplyDelete
  8. உண்மையை சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete