Saturday, June 4, 2011

நாற்றமடிக்கிறதென்று !



  • தூரத்தே நின்று


நாற்றமடிக்கிறதென்று

மூக்கைப் பிடிப்பவர்களே!

  • எம் அருகில்


வருவதற்கு அசிங்கமுற்று

தூர நிற்பவர்களே!

  • கழிவுநீர் அடைத்துக்கொண்டால்


ச்சீ..என்று காரி உமிழ மட்டுமே

எச்சில் சுறப்பவர்களே!

  • ஏளனப் பார்வையால் எமை


குப்பைக்காரன் என்று கூறி

தூற்றி நிற்பவர்களே!

  • ஆக்சிஜனை மட்டுமே


சுவாசித்து உயிர்வாழ

உங்கள் உலகம் பழகியிருக்கிறது!

  • விஷவாயு


சுவாசித்தும் காலம் தள்ள

எம் இதயம் இளகியிருக்கிறது!

  • சாக்கடையில் நாங்கள்


இறங்காவிட்டால்

இந்த சமுதாயம்

நாறிப்போகும் ஞாபகம் வையுங்கள்!

Widget byLabStrike


6 comments:

  1. நல்ல பதிவு.
    நினைக்கவே வேதனைப் படுகிறது.

    ReplyDelete
  2. நிச்சயம் நாரி விடுவோம்.... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ரொம்பவே நன்றாக இருக்கு என்று சொல்லவதை விட இது ஒரு நல்ல பாடம் என்றே
    கொள்ளவேண்டும்.

    ReplyDelete
  4. மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  5. மிக்க நன்றி நண்பரே!!

    ReplyDelete