Thursday, May 26, 2011

தன்னைமறந்த நிலையில் தடம் மாறி !




  • சாயங்கால வேலை

சாலையின் ஓரம்

ஏதோ ஓர் சிந்தனையில்

எங்கோ

நடந்துக்கொண்டிருக்கிறேன்.

என் அருகாமையில்

சைக்கிளில் வந்தவன்

சபிக்கிறான் என்னை.

"சாவு கிராக்கி

ரோட்ட பாத்து போடா"

  • என்னை கடந்து

தன்னை மறந்து

சைக்கிளில் போனவனை

எங்கிருந்தோ வந்த

பகட்டு பைக்கு காரன்

மடக்கி கேட்கிறான்.

"மடையா ஒழுங்கா வண்டி ஓட்ட

உனக்கு தெரியாதா?

ரோட்ட அளக்குற!"

  • மடக்கி கேட்டு

பறந்த பைக்கை

விரைந்து பிடித்த

மகிழ்வுந்துகாரன்

மானம் போக

மரியாதையின்றி கேட்கிறான்.

"பாத்து ஓட்ட மாட்டியா?

வயித்துக்கு  சோறு தானே

திங்குற..?"

  • மகிழ்வுந்து ஓடிட

வந்து சேருகிறது

அதனருகில் பேருந்து.

பேருந்து ஓட்டுனர்

பெரிதாய் கத்துகிறார்.

"கார் ஓட்டினா

கண்ணு முன்னு தெரியாதாடா

பொறுக்கி ராஸ்கல்"..

  • இப்படியாய் நீள்கிறது

சங்கிலித் தொடராய்..

தன் தவறை மறந்துவிட்டு

தடம் மாறி ஓ(ட்)டுகின்ற

அனைவரின் அர்ச்சனைகளும்!


Widget byLabStrike


No comments:

Post a Comment