Tuesday, May 24, 2011

சல்லாபம் தேடும் சதிகார மனது!



  • பேருந்து பயணத்தில்


கூட்ட நெரிசலில்

என் குறுகிய மனம்

அருகிலிருப்பவனை

குமுறிக்கொண்டே

இருக்கிறது.

  • அரிதாக அவன் என்னை


இடித்த போதும்

பெரிதாக

கோபம் கொண்டு

பொருமிக் கொள்கிறேன்.

  • வசீகரிக்கும்


வாசனை திரவியம்

ஆனாலும்

வசவு பொழிகிறேன்

அவன் மீது.

"நாதாரி

நாத்தம் புடிச்ச எதையோ

அடிச்சுட்டு வந்திருக்கு."

  • அவ்வளவு


கூட்டத்திலும்

அதிகார தோரணையில்

அவனிடம் சொல்கிறேன்

"உரசாம

ஒதுங்கி நில்லுங்க

சார்."

  • அவன் ஒதுங்கி நின்ற


இடைவெளியில்

ஒருத்தி என்னை

உரசிக்கொண்டு

ஒய்யாரமாய்.

என் சதிகார மனது

சந்தோசப் பட்டுக் கொள்கிறது.

  • இப்போ


என்னைப் போலவே அவன்

என்னைப் பார்த்து

பொருமிக்கொண்டு!

Widget byLabStrike


10 comments:

  1. நண்பா கவிதை பிரமாதம்! யதார்த்தத்தை ஒளிவு மறைவு இல்லாம ரொம்ப அழகா சொல்லிட்டீங்க! மிகவும் ரசித்து சிரித்தேன். நன்றியும் வாழ்த்துக்களும்..... :-)

    ReplyDelete
  2. மிக்க நன்றி நண்பரே..

    ReplyDelete
  3. மிக்க நன்றி நண்பரே..நீண்ட நாட்களுக்கு பின் உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் ..

    ReplyDelete
  4. cute da., thatz life...nature

    ReplyDelete
  5. மனதின் நிர்வாணம் காட்டிய நண்பருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. மிக்க நன்றி நண்பா..

    ReplyDelete