Monday, May 9, 2011

இரு கோடுகள்!



  • இணையாத இரு கோடுகள்


எதை நோக்கி

பயணிக்கின்றன!

  • பயணம் ஓர்


எல்லையை எட்டப்பட

வேண்டும்!

  • போகாத ஊருக்கான


பயணம்

வேலையற்றவனின் வெட்டித்தனம்!

  • ஒருமிக்காத மனமும்


சேர்ந்திராத கோடுகளும்

நோக்கம் அற்றவை!

  • இணை கோடுகள் என்கிறோம்


கரம் கோர்த்து

இணையாக் கோடுகளை!

  • இரு இணைகின்ற மனது


ஒருமித்துப் போகிறது

மனம் நிறைய மகிழ்ச்சியுடன்!

  • ஒத்துப் போவதில்


உள்ள வெற்றி

ஒற்றைக்கோட்டில் உள்ள தத்துவம்!

Widget byLabStrike


2 comments: