Friday, May 6, 2011

பவர் கட்- கறை நல்லது!



இந்த பவர் கட் பண்ணி இப்டி சாவடிக்கிறாங்களே..மனுஷன் எப்படித்தான் வாழுறது.. ஆம்பளைங்கலாவது ஆபீஸ் அது இதுனு வெளிய போய்றாங்க..இந்த பொம்பளைங்க வீட்ல கரண்ட் இல்லாம படுற கஷ்டம் இருக்கே.அய்யோ..என தான் சீரியல் பார்க்க இயலாத குறையை புலம்பலாய் தீர்த்து வைத்தாள் குமாரி.சில நேரங்களில் பவர் கட் ஆனால் ,அந்த வெறுப்பை ,தன் குழந்தைகள் மீதும்,கணவனின் மீதும் கூட அவள் காட்டுவது வழக்கம்.

ராஜூ குமாரியின் கணவன்.மின்சார அலுவலகத்தில் வேலை பார்ப்பவன் .அதனால் கூட பவர் கட் ஆனால் குமாரியின் வெறுப்பு ராஜூவின் மீது பாயும்.மின் அலுவலகத்தில் தானே வேல பாக்குறீங்க..இதுக்கு ஒரு வழி பண்ணக்கூடாதா ?என கணவனிடம் குமுறுவாள் .

மின்சாரம் ஒட்டு மொத்த மாநிலத்துக்கே பத்தாம இருக்கு..அரசாங்கத்தாளையே முடியல..அங்க வேல செய்யுறதால நான் என்னடி பண்ண முடியும்... என தன் குமுறலை கொட்டுவதை தவிர அவனாலும் வேறெதுவும் செய்ய முடிவதில்லை.

அன்று ராஜூ வேலைக்கு சென்று வீட்டுக்கு வந்திருந்தான்.நல்ல பசியோடு வந்தவன் ,குமாரியை அழைத்து ,உணவை எடுத்து தட்டில் தயாராக வை.கை,கால் அலம்பி விட்டு வருகிறேன் என குளியலறையில் நுழைந்திருக்கிறான்..

அப்பா..தப்பிச்சோம்..  இன்று பவர் கட் இல்லை..இல்லையேல் சோறு போடும் போது கூட புலம்பி சாகடிப்பளே.. என எண்ணிக்கொண்டே குளியலறை மின்விளக்கை போட  எத்தனித்திருக்கிறான்.

ஆ..என்கிற அலறல்..குளியலறையில் ராஜூ சறிய , என்னங்க என அலறியபடி ஓடிய குமாரி அவனை அணைத்துப் பிடிக்க..அவளும் சரிகிறாள்.

பவர் கட் ஆகிறது..

ராஜூ எழுகிறான்..தன்னை ஆசுவாசப்படுத்தி குமாரி எழுகிறாள்....அப்போதான் தன் கணவனை மின்சாரம் தாக்கியதை அவளால் அறிய இயல்கிறது..

இது குமாரியின் குரல் ..நல்லவேளை பவர் கட் ஆச்சு..நாம பொழச்சிட்டோம்..அந்த ஆண்டவனுக்குதான்  நன்றி சொல்லனும்ங்க !


Widget byLabStrike


No comments:

Post a Comment