Tuesday, May 3, 2011

பின் லேடன் முகமும்,பின் தொடர்ந்த சந்தேகங்களும்!


நேற்று பின்லேடன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட செய்தியை தொடர்ந்து அவர் தலையில் சுடப்பட்டு இறந்தது போன்ற ஓர் புகைப்படம் உலகையே ஓர் உலுக்கு உலுக்கிவிட்டது.பின் லேடன் இறந்த புகைப்படத்தை,அமெரிக்கா அதிகார பூர்வமாக இன்னும் வெளியிடாத நிலையில், ஏனைய இணையதளங்களும்,இணைய செய்திகளும், தொலைக்காட்சி,செய்தித்துறை ஊடகங்களும் இணையத்தில் வெளியான ஓர் புகைப்படத்தை வெளியிட்டன.அதனைத் தொடர்ந்து இணையங்களிலும்,சமூக வலைப்பின்னல்களிலும் பரபரப்பு விவாதங்கள் பற்றிக்கொண்டன.நெற்றியில் சுட்டிருக்கிறார்கள் போலும்.?இல்லை கண்பகுதியில்?என்பது போன்று.மறுபுறம் இது உண்மையான புகைப்படமா?போலியா என்று ?

பல மணி நேர ஆராய்ச்சிக்குப் பின்னும்,சில இணைய தளங்கள் அந்த புகைப்படம் போலி என உறுதி செய்யப் பட்ட பின்னுமே ஒருவாறு முடிவுக்கு மக்களால் வர இயன்றது.கடைசியாக பார்த்தால் அது இரண்டு வருடங்களுக்கு முன்பே இணையங்களில் உலவிய புகைப்படமாம்.

இப்படி மக்கள் மத்தியில் சந்தேகம் கிளம்புவதற்கான காரணம் பொறுப்பற்ற தொலைக்காட்சி ஊடகங்களும்,செய்த்தித்தாள் நிறுவனங்களுமே.உண்மையா என உறுதி செய்யாத ஓர் புகைப்படத்தை எடுத்து அதை மக்கள் மத்தியில் பரப்பி,பரபரப்பை ஏற்ப்படுத்தி வியாபாரம் செய்வது.ஒரு நிகழ்வு நடக்கும் போது ஓர் சாதாரண மனிதன் கூட அது உண்மைதானா?அதற்கு ஆதாரம் இருக்கிறதா என அறிய முயற்சிப்பான்.ஆனால் பொறுப்புள்ள ஊடகங்கள் எவ்வளவு கேவலமாக நடந்து கொள்கின்றன பாருங்கள்!

Widget byLabStrike


7 comments:

  1. என்னமோ நீங்க சொல்லிட்டீங்க, நாங்க எதையுமே நம்ப மாட்டோம்ல...

    இப்போ நீங்க சொல்லுங்க பின் லேடன் சுடப்பட்டாரா இல்லையானு???

    எனக்கு என்னமோ இந்த செய்தி உண்மைதான்னு தோன்றுகிறது.

    ReplyDelete
  2. பின்லேடன் கடந்த ஞாயிறு அன்று கொல்லப்பட்டதாக உலவிடும் செய்தி போலியான ஒன்று.
    செய்தித்தாள்கள், தொலைக்காட்சி பெட்டி போன்ற ஊடகங்களை மட்டுமே நம்பி ஏமாந்து கொண்டிருக்கும் உங்களைப் போன்றோருக்கு ஒரு உண்மையை சொல்கிறேன்.
    பின்லேடன் எனும் மனிதன், சமூகத்தால் தீவிரவாதி என அடையாளமிடப்பட்ட ஒரு ஜீவன் இறந்து 2 வருடங்களுக்கு மேல் ஆகின்றது...
    இதே போன்ற ஒரு குழப்பமான சூழ்நிலைதான் இன்னமும் நிலவிக் கொண்டிருக்கிறது.... நேதாஜி முதல் பிரபாகரன் தொடர்ந்து இன்று பின்லேடன் வரை...
    இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா..... கவுண்டமணியின் குரல் என் காதில் ஒலிப்பது உங்களுக்கு கேட்கிறதா....

    ReplyDelete
  3. ஒசாமா கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உலகின் பல ஊடகங்கள் வெளியிட்டுவருகின்றன
    ஒசாமாவின் புகைப்படம் அதிகாரப் பூரவமானது அல்ல .உருவாக்கபட்டது என்ற செய்திகளும் வலம் வருகின்றன .ஆனால் அமெரிக்க அரசு அதிகாரபூர்வ மாக வெளியிட உலகம் முழுதும் கோரிக்கைகள்
    எழுந்தவண்ணம் உள்ளன .தெளிவு பெறுவது அவசியம் தான் .அதற்காக முற்றிலும் நம்ப மறுப்பது
    சரியானதாக இருக்க முடியாது

    ReplyDelete
  4. evalavu kuzhapam comments la kooda idhuku than naan news paper parkaradhea kidayadhu.

    ReplyDelete
  5. hmmm onnume puriyala ulagathile, ennamo nadakuthu marmamai irukuthu......

    ReplyDelete