Sunday, May 1, 2011

உலகம் உன்னாலே தழைக்கிறது!உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்!



  • உன் குருதியின் அளவை விட

உன்னில் கொட்டுகின்ற

வியர்வை அதிகம்!

  • உன் உடல் எடையை விட

நீ சுமக்கின்ற

பாரம் அதிகம்!

  • உன் தேகச்சுருக்கத்தை விட

உன் வாழ்வில்

வறுமைக்கோடுகள் அதிகம்!

  • உன் பாதையில் மட்டும்

முட்களும்,கற்களும்

முன்னில் அதிகம்!

  • நீ உழைத்து களைத்து

பெறுகின்ற கூலி மட்டும்

இன்னுமும் குறைவு!

  • இருந்தும் எதிர்பார்ப்பற்று

உழைக்கிறாய்!

  • உலகம் உன்னாலே

தழைக்கிறது!

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்நநாளில் உழைத்து களைத்தவனின்,வாழ்க்கை செழிக்கவும்,வறுமை ஒழியவும்,பட்டினி சாவு இல்லா உலகை பாரினில் சமைக்கவும் வாழ்த்துவோமாக!
உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்!



Widget byLabStrike


No comments:

Post a Comment