Tuesday, May 10, 2011

மோகமுள்!



தீராப்பசி கொண்டு

தீஞ்சுவை ருசிக்க

வெறி கொண்டு

ஹார்மோன் கடலிலே

ஆழக் குளித்து

மதுவின்றி மயங்கி

கண்கள் கிறங்க

கால்கள் பின்னிட

கைகள் கோர்த்து

தணியாத தாகமொன்று

தலைக்குப்புறக் கிடக்கிறது!

முனகலில் இசைபாடி

மோட்சமடைய நினைக்கிறது!

---000---

கண்ணில் வராத தூக்கம்

மோகம் கொண்ட தாக்கம்

எத்தனை நாள் ஏக்கம்

விரல் பட்ட வேகமோ

விரகம் கொண்ட தாகமோ

நாவு சுவைத்த ருசியோ

உறுப்பு கொண்ட பசியோ

முடிவின்றி நீள்கிறது

மோகம் கொண்ட இரவு!

---000---

கைகள் அவளாகி

கடமைகள் தொடர்ந்திட

விரல்கள் அவனாகி

பாற்கடல் கடைந்திட

பருவம் கொண்ட தகிப்பு

விரகம் தீர்த்துக் கொள்கிறது

துணையற்ற இரவினிலும்

துணைநின்று!


Widget byLabStrike


No comments:

Post a Comment