Sunday, April 24, 2011

இரவல் வந்த வெய்யில்!



பூட்டிவைத்த

வெய்யிலை

வீட்டினுள் விட்டேன்

கதவு திறந்து..

சிறுகீற்றாய்

நுழைந்து

பெரும் நெருப்பென

பரவி

அகன்ற பரப்பை

ஆக்கிரமித்து

காலம் மாற மாற

இடமாறி

தன் இருப்பை

இருத்திக் கொள்கிறது

வெளிச்சமாய்..

இரவல் வந்த

வெயிலும்!


Widget byLabStrike


No comments:

Post a Comment