Thursday, April 21, 2011

இன்னும் எத்துனைக் காலம் இத்துயர் நீளுமோ!



  • மீனைப்போல

துள்ளியோடிய படகில்

தூரத்து திசை நோக்கி

துடுப்பு போட்டவன்

காலம் கடந்தும்

காணவில்லை.

  • வருவான் கணவனென

வாசல் பார்த்து

காத்து நின்று

கண்ணீரில் கடலானாள்

மனைவி யவளும் .

  • மீன்பிடிக்க போனவன்

கருவாடாய் கரை ஒதுங்க

கேட்பாரற்ற திருநாட்டில்

பேருக்குமட்டும் இந்தியனாய்

பிறந்திட்டான் தமிழானாய்

இருந்திட்டான் மீனவனாய்

இதுதான் இவன் செய்த

பாவமோ!

இன்னும் எத்துனைக்

காலம்

இத்துயர் நீளுமோ!


Widget byLabStrike


No comments:

Post a Comment