Thursday, April 7, 2011

ஆடுகின்ற கூடுகட்டி அல்லாடுகிறாய் நீ!


  • ஆடுகின்ற கூடுகட்டி
அல்லாடுகிறாய் நீ.
நான் நிலையான
கிளையினிலே
நிம்மதியாய் வாழ்கிறேனே!
தூக்கணாங் குருவியை
பார்த்து
உயர்ந்த மரக்கிளையில்
ஒய்யார கூடுகட்டி
வாழ்ந்திட்ட பறவையின்
ஏளனப் பார்வை
அது!
  • பெருங்காற்றடித்து
காரணத்தாலே
நிலைகுலைந்த
மரத்தோடு உருக்குலைந்து
கிடக்கிறது
ஒய்யார பறவை!
வளைந்து
வாழ்வினிலே
விட்டுக் கொடுத்து
வாழ்ந்ததிலே
வெல்ல முடிகிற
வாழ்க்கை
தூக்கணாங் குருவி
கூடு
இன்னும் கம்பீரமாய்
தொங்கிக்
கொண்டிருப்பதில்
பறவைக்கு தெ(பு)ரிந்தது!


Widget byLabStrike


No comments:

Post a Comment