- கையில் கட்டிக்கொள்
உனைக் காத்திட வல்லது
கறுப்புக் கயிறென்பார் !
- ராக்கி கயிறொன்றை
கையில் கட்டி விட்டு
சகோதரம் பேனுவோமென்பார்!
- இடை உடை அவிழாமல்
காத்திட கட்டிடும் கயிறு
அரைஞான் கயிறென்பார்!
- கலர்கலராய் கயிறு கையில்
கட்டிக்கொண்டு
நாகரிகத்தின் பெயர் சொல்வார்!
- கம்பளிக் கயிறு கட்டிக்கொண்டு
கன்னுப்படாமல் காத்திடவே
திருஷ்டி கயிறென்பார்!
- முரண்டு கொண்டால்
மாடு அடக்கிட
மூக்கணாங்கயிறு என்பார்!
- மஞ்சள் கயிறொன்றை
கழுத்தில் கட்டிடவே
உறவு நிலைத்திடும் தாலிக் கயிறென்பார்!
- கழுத்தில் பாய்ந்து
உயிர் பறித்திடும் வேளையில்
தூக்குக் கயிறென்பார்!
- மனிதரைப்போல்தான்
நிறமாறும் போதும்
இடமாறும் போதும்
குணமாறிக் கொள்கிறது கயிறும்!
பகிர்வு நன்று!
ReplyDeleteரொம்ப நல்லாயிருக்கு நண்பரே!
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே!!
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே!
ReplyDeleteHi ... remba nalla iruku
ReplyDeleteஉங்கள் கயிறு அருமை... வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே....
ReplyDeleteமிக்க நன்றி தோழி..
ReplyDeleteமனிதரைப்போல்தான்
ReplyDeleteநிறமாறும் போதும்
இடமாறும் போதும்
குணமாறிக் கொள்கிறது கயிறும்!
அருமையாகச்சொல்லி இருக்கிரீர்கள்.
நன்றி தோழி....
ReplyDeleteகயிற்றின் குணம் மாற்றுபவர்களே இந்த நிறம் மாறும் மனிதர்கள்தானே !
ReplyDeleteஆமாம் தோழி..மனிதர்களிடத்தில் இருந்துதானே எல்லாமே நிறமாறுகிறது.
ReplyDeletewow!! execellent pa
ReplyDeletethank you!
ReplyDelete