Tuesday, March 8, 2011

மங்கையெனும் உறவில்லையேல் மங்கிவிடும் உலகு!



பேதை என்பார்

பெதும்பை என்பார்

மங்கை என்பார்

மடந்தை என்பார்

அறிவை என்பார்

தெரிவை என்பார்

பேரிளம்பெண் என்பார்

பெருமை கொள்ளும்

உறவுகளாய் நின்று

மகளாய்

மடி நிறைபவள்

தங்கையாய்

குறும்பு செய்பவள்

அக்காவாய்

ஆதரவு கரமவள்

அத்தையாய்

அன்பு செய்பவள்

பாட்டியாய்

பாசம் நிறைந்தவள்

காதலியாய்

கருணை பொழிபவள்

மனைவியாய்

உயிரானவள்

தோழியாய்

தோள் சாய்பவள்

அம்மாவாய்

எல்லாம் ஆனவள்.

எப்படியோர்

உறவாயினும்..

மங்கையெனும் உறவில்லையேல்

மங்கிவிடும் உலகு!

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

என் இனிய மகளிர் தின நல் வாழ்த்துகள் !


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Widget byLabStrike


11 comments:

  1. nice lines.... women the great....

    ReplyDelete
  2. இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. http://feedproxy.google.com/~r/blogspot/QNkZi/~3/MY6NuVpzPdY/blog-post_08.html

    மாதராய் பிறந்திட மாதவம் செய்திட வேண்டுமம்மா

    ReplyDelete
  4. வைர வரிகள் நண்பரே!

    ReplyDelete
  5. நண்பா,
    இப்போது உன்னை அறிய ஒரு வாய்ப்பினைத் தந்தாய். நீ பெண்ணினத்தை மதிப்பவன் தான் என்று இந்த பேதையும் அறிந்துக் கொள்ள ஒரு வாய்ப்பு. நல்ல வேளையாக இந்த பதிவினை படித்துவிட்டேன். படிக்காமல் இருந்து இருந்தால், இன்னமும் உன்மீது சிறிது கோபத்துடனே இருந்து இருப்பேன்.

    சிறப்பான மகளிர் தின வாழ்த்துக் கவிதை தோழா....

    ReplyDelete
  6. ப.முத்துகுமர்April 7, 2011 at 3:51:00 AM GMT+5:30

    மிகவும் நன்று

    ReplyDelete
  7. மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete