Thursday, February 24, 2011

கண்களை திறந்து பாருங்கள்!



  • நீங்கள் மயில்கள்

அழகென்று

ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

எங்கள் கண்களில்

மயிலை விடவும்

அழகாய் தெரிகிறது

கானம் பாடும் குயில்.

மயிலும்,குயிலும்

ஒற்றை நிறம்தான்

எங்கள்

ஒருமைப்பாட்டில்!

  • இருட்டு உமக்கு

பயம் தரலாம்

விடியலே உம்மைப்

பொறுத்தவரை

வெளிச்சமாயிருக்கலாம்.

நீங்கள் கண்களை

விரிப்பதில்லை!

விடியலுக்கும்,இரவுக்கும்

பெரிய வித்யாசமில்லை

எங்கள் பார்வையில்..

இரண்டுமே

வெளிச்சம் தருகின்றன!

  • நிறம் பிரிப்பவனுக்கு

இனம் வேறு.

எங்களிடத்தில்

அது இல்லை.

வெள்ளையனும்

எம்மிடத்தில்

கருப்பனாகிப் போகிறான்.

எம் உலக நிறம்

கருப்பு!

  • உங்களிடத்தில் கண்

இருக்கிறது.

பார்வையில்லை.

அதனால்தான்

கருப்பை பார்த்தால்

அபசகுனம்

என்கிறீர்கள்..

கண்பார்வையற்ற

எங்களுக்கு தெரியும்

கருப்பின் அழகு!

  • அகக்கண் திறந்து

அகிலத்தை

நோக்குங்கள்.

பாராபட்சமற்ற

கருப்பின் அழகு

உம் பகுத்தறிவை

வளர்க்கட்டும்!


Widget byLabStrike


No comments:

Post a Comment