
- கண்கள் மூடி
கவிழ்ந்து படுத்து
உறக்கமற்று
நீள்கிற இரவு
- கண்கள் விரித்து
காண்கிற காட்சி
உன் உருவிலேயே
நிறைகிற நினைவு
- செய்கிற வேளையில்
சிந்தையின்றி
உன்னை சுற்றியே
விரிகிற எண்ணம்
- மூளை உறங்கி
நினைவுகள் உறங்கா
காலத்தின் நீட்சி
- விடிய விடிய
உன் பெயர் மட்டுமே
உச்சரிக்கும்
விந்தை
- இவையெல்லாம்
என்னிடத்தில் சொல்கிறது
நான் காதல் முக்தி
அடைந்துவிட்டே னென்று!
- நீ எளிதாய்
சொல்லிவிட்டாய்
நீ சைக்கோ
ஆகி விட்டாயென்று!
ரொம்ப நல்லாயிருக்கு! காதல்னா அப்படித்தானோ:-)))
ReplyDeleteநான் கூட ஒரு சைக்கோ கவிதை எழுதினேன்.
சைக்கோ கவிதை:
நித்தம் ஒன்றென செய்த போதும்
திருப்தி வந்ததில்லை எனக்கு
இன்றுதான் இறுதியென
முடிவெடுத்து ஆரம்பித்தேன்
விதமாய் விதமாய் செய்தேன்
கொலை எனும் கலையை
ரத்தம் பார்த்த பின்தான் என்
சித்தம் சிறிது அடங்கியது
துடிதுடிக்கும் குரலை கேட்டபின்
சொன்னது என் மனம்
இன்னும் வேண்டும் எனக்கு
புது அனுபவம்....
மிக மிக அருமையான கவிதை எஸ்.கே..ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் புது அனுபவம் வேண்டியிருக்கிறது..அது அடுத்தவர் பார்வையில் வேறோர் அர்த்தத்தைக் கொடுக்கிறது!
ReplyDeleteஅய்யோ என்னமோ எனக்கு பயமா இருக்கு ! ! ! இந்த சைக்கோவை பார்த்து
ReplyDeleteஅந்த பயம் இருக்கட்டும்..ஹி..ஹி..
ReplyDeleteநான் கூட ஒரு கவிதை எழுதி இருக்கேன் ..
ReplyDeleteஇரவு முடிந்திருந்தும்
என் உலகம் இன்னும் இருளில்..
விடியல் தொலைத்துவிட்டேன்
விடியும் நாள் வருமோ?
அன்பாய் பேசிய நீ
இன்று அந்நியன் ஆனது ஏன்?
என் மனதின் அழுகுரலும்
உன் செவியேற மறுப்பது ஏன்?
தொலைந்த என் விடியல்
தேடி ஓடுகிறேன்
கனவிலும் கதறலொலி
செவிடாகி ஊமையானேன்..
எங்கே உன்னை தொலைத்தேன்
தேடி கிடைக்கவில்லை
நீயே வருவாயா?
என் தேடல் முடிப்பாயா?
விந்தை இவ்வாழ்க்கை
சிந்தை கலங்கியதே
இறுதி மூச்செதுவோ?
என் இறுதி மூச்சிதுவோ?
ஒவ்வொரு நிமிடத்திலும்
ஆயிரம் கேள்வி நெஞ்சில்
ஐந்தேனும் அறிவாயோ?
விடைகள் பகர்வாயோ?
பேச தொடங்கவில்லை
பின் பேச்சு முடிவதெங்கே?
வெறுத்தேன் எனை முழுதும்
பித்து மனம் முழுதும்..
உலகம் ஒளி மறந்தால்
உதடுகள் மொழி மறக்கும்
இதை நீ அறிந்திலையோ
என் எண்ணம் புரிந்திலையோ?
மனமே பேசிடுவேன்
கேள்விகள் கேட்டிடுவேன்
பதில் வரும் காத்திருப்பேன்
பதில் வரும் காத்திருப்பேன்..
அருமையான,ஆழமான கவிதை தோழி..உங்கள் உள்ள உணர்வுகள்,எழுத்தின் வடிவம் என்னுள்ளே ஊடுருவியது...எழுத்துநடை இனிமை சேர்க்கிறது!
ReplyDelete