Sunday, February 20, 2011

வீரவணக்கம்!





கணவன் இறந்திட்டால் என்ன

என் மகன் இருக்கிறான்.

அழைத்துச்செல்லுங்கள் அவனை

போர்முனை நோக்கி..

என்றபோது

புன்முகம் மாறாது

புறப்பட்ட மகனையும்

இன்முகம் மாறாது

அனுப்பிய தாயையும்

புறநானூற்றில் கண்டேன்.

-----000-----

நின் புதல்வனை

தமிழ் காக்க அனுப்பி

தமிழன் மானம் காக்க

வளர்த்து

ஈழம் முழுக்க

வீரம் விளைய

தேசியத் தலைவனாய்

புறமுதுகு காட்டாத

புறநானூற்று வீரத்தை

பார் போற்ற-உம்மால்

இந்நூற்றாண்டில்

கண்டேன்!

தமிழுக்கு தலைவனை தந்தவளே...எம் தாயே ...இன்று உம் உயிர் பிரிந்திருக்கலாம்..

இத்தரணி உள்ளவரை,தமிழது உள்ளவரை,உம் நினைவுகள் மறையாது..நிறைந்திருக்கும்

எங்கள் நெஞ்சங்களில்!!!


Widget byLabStrike


No comments:

Post a Comment