Wednesday, February 16, 2011

மன்றல் விழா வாழ்த்துகள்!





வண்ணக்கனவுகளை எண்ணங்களாய் சுமந்தபடி

என்னைப்போலவே அவனும்..

ஓவியக்கல்லூரியில் ஒன்றாய்,ஒரே ஆண்டில் அடியெடுத்து வைத்ததோடு எனது சக வகுப்புத் தோழனாகவும்...

கல்லூரி எங்களின் நட்புக்கு களமான போதும்..எங்கள் நட்பு வீரியம் கண்டது விடுதியில்தான்.

ஒரே தட்டில் சாப்பிட்டு,ஒன்றாய் உறங்கி,சேர்ந்தே பட்டினி கிடந்து,சேர்ந்தே வேலை தேடி,சேர்ந்தே அறையெடுத்து தங்கி என சேர்ந்து சுற்றிய நாட்கள் ஏராளம் ..எல்லாம் நட்பின் ஆழம் சுமந்தவை..

எம் அன்பை சுமந்த அந்த ஆருயிர் தோழனுக்கு,தற்போது கலை இயக்குனனாய் திரைத்துறையில் களம் கண்டவனுக்கு, இன்று திருமணம்...

மூர்த்தி,லட்சுமி கரம்கோர்த்து, இன்முகம் மாறாது ,இல்லறவாழ்வில் நல்லறம் கண்டு ,

இல்வாழ்வை தொடர்ந்திட வாழ்த்துகள்...


Widget byLabStrike


No comments:

Post a Comment