Tuesday, February 15, 2011

காதல் உயிர்த்துக் கொண்டிருக்கிறது!



மொழியும்,இலக்கியமும்

இருக்கிறதென்றால்

கவிதையும்,காவியமும்

உயிர் வாழ்கிறதென்றால்

ஓவியமும்,ரசனையும்

உறவாடுகிற தென்றால்

சாதியும்,மதமும்

அழிகிறதென்றால்

சம்பிரதாயமும்,சடங்குகளும்

உடைகிறதென்றால்

சமத்துவமும்,அன்பும்

நிலைக்கிறதென்றால்

பகுத்தறிவும்,தெளிவும்

தென்படுகிறதென்றால்

அறிவியலும்,ஆராச்சியும்

விளைகிற தென்றால்

மானுடமும்,மனிதத் தன்மையும்

மறவாமல் இருக்கிறதென்றால்

அகிலம் இன்னும்

அழியாதிருக்கிறதென்றால்..

காரணம்

காதல் இன்னும்

உயிர்த்துக் கொண்டிருக்கிறது!


Widget byLabStrike


No comments:

Post a Comment