Monday, February 14, 2011

காதலித்துக் கொண்டிருக்கிறேன்!



  • மிருக புத்தியில்

மனித உருவமாய்

வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

எப்போதேனும்

மனிதத் தன்மைக்கு

மாறியிருக்கிறேன்.

அப்போதெல்லாம்

காதலித்துக் கொண்டிருக்கிறேன்!

  • கற்பனை வறண்ட

வெற்று மூளையாய்

அலைந்து கொண்டிருக்கிறேன்

எப்போதேனும்

கற்பனைமிகுதி கட்டுக்கடங்காமல்

மிரண்டிருக்கிறேன்.

அப்போதெல்லாம்

காதலித்துக் கொண்டிருக்கிறேன்!

  • அர்த்தமற்ற வாழ்வுதனில்

உழன்று கொண்டிருக்கிறேன்

எப்போதேனும்

அர்த்தமுள்ள வாழ்வுதனை

உணர்ந்து கொண்டிருக்கிறேன்.

அப்போதெல்லாம்

காதலித்துக் கொண்டிருக்கிறேன்!
----------------------------------------------------------------------------------------------------------------------------------


"எப்போ நீ காதலிக்க துவங்குகிறாயோ அப்போ நீ மனிதனாகிறாய்!"

..அனைவர்க்கும் காதலர் தின நல்வாழ்த்துகள்..

----------------------------------------------------------------------------------------------------------------------------------------


Widget byLabStrike


No comments:

Post a Comment