Wednesday, February 9, 2011

ஒளியும்,ஒலியும்!

எங்கள் அலுவலக தேநீர் இடைவேளையை எப்போதும் ஏதோ ஓர் நினைவோ,நிகழ்வோ ஆக்ரமித்துக் கொள்ளும்.யாரேனும் ஆரம்பித்து வைக்கும் கருவை சுற்றி எங்கள் கலாய்த்தல்கள்,கதைகள்,விவாதங்கள்,அரசியல்,சமூகம்,நினைவுகள்,கனவுகள் என கண்டபடி கதை ஓடும்.அப்படி ஆரம்பித்ததுதான் இன்று மலரும் நினைவுகளின் அலசல்கள்.பத்து,பதினைந்து வருடங்களுக்கு முன்னாலான பொழுதுபோக்கு அம்சத்தை,வாழியலை சுற்றிய நினைவோடைகள்.தூர்தர்சன் பார்த்த காலத்தின் கனவுகள்.

இன்னும் எல்லோரின் உள்ளும் மறவாமல் இருக்கிறது தூர்தர்சன் லோகோ இசை..வயலும்,வாழ்வும்,ஒளியும்,ஒலியும் என ஓயாமல் ஒலிக்கிறது ஞாபகங்கள்.முக்கியமாய் அந்தக்கால விளம்பரங்கள் இன்னும் எல்லோர் நினைவுகளிலும் அகலாமல் அப்படியே!

சுவை மாறாமல்,நிறம் மாறாமல்,திடம் மாறாமல் அப்படியே இருக்கிறது 3 roses விளம்பரம் .எல்லோரின் நினைவுகளிலும் ஒருங்கே நிறைந்தது வாஷிங் பவுடர் நிர்மாதான்.அந்த பாவாடை சுழற்றும் பருவப்பெண் அப்படியே நிறைந்திருக்கிறாள் நினைவுகளில்.லிட்டருக்கு நாலு சொட்டு உஜாலா சொட்டிக் கொண்டே இருக்கிறது மலரும் கனவுகளில்.இப்படியாய் நீள்கிறது நினைவுப்பட்டியல்..சொல்ல சொல்ல இனிக்கிறது.கேட்க கேட்க பத்து அண்டுகளுக்கு முன் எண்ணமும் ,வயதும் பயணிக்கிறது.நான் வளர்கிறேனே மம்மி என்று நாம்தான் வளர்ந்து வயதையும்,காலத்தையும் கடந்து விட்டோம்.இன்றைய நவீன யுகம் நம்மையே நமக்கு மறக்க வைக்கிறது.

இருந்தும் ஏனைய நினைவுகள் நம்முள் தேங்கியே கிடக்கின்றன..கிளறி விடும் போது சொல்லொண்ணா சந்தோச அலைகளை நமக்கு அளிக்கின்றன...நம் மறக்க இயலாத கடந்த கால கனவுகளில் நீங்களும் லயிக்க!

























Widget byLabStrike


No comments:

Post a Comment