Sunday, February 6, 2011

தூங்கா நகரம்-நம்மை தூங்க வைக்கிற ரகமில்லை!பிரமாண்டடமான அரண்மைனைப் போன்ற அந்த பழைய காலத்து பங்களாவில் கீழிருந்து மேல்நோக்கி கேமரா நகர்ந்து அதன் உச்சத்தை எட்டி ,உள்ளே புகுந்து பங்களாவின் இண்டு இடுக்குகளை உள்வாங்கி உள்நுழைந்து அறைகளின் அனைத்துப் பக்கங்களிலும் ஊடுருவி,வழிநெடுகே பயணித்து வீட்டை விட்டு வெளியே வாசல் வழி வருகையில் மழை பெய்யத் துவங்கி இருக்கிறது,மூவரின் கால்கள் தண்ணீரில் ஊடுருவ ,சாக்குபோர்த்திய உருவங்கள் கையில் டார்ச் லைட்டுடன் பயணிக்க,அந்த இரவின் வெளிச்சத்தில் நம்மை ஆரம்பமே மிரள வைக்கிறது.இப்படித்தான் தொடராய் பதிவு செய்திருக்கிறது காமெரா.. திகில் படமோ என்கிற மனநிலையை அந்த லைட்டிங் செய்கிறது.அப்புறம்தான் ஆரம்பிக்கிறது நாலு நண்பர்களின் கடந்தகால வாழ்க்கை ,வடிவேலுவின் வாய்ஸ் உடன்.

மதுரை மீனாசியம்மன் கோவில்,தூங்கா நகரத்தின் இரவு சாப்பாடு,அழகர் கோயில் திருவிழா என அமர்க்களமான ஆரம்பத்தில் திரை முழுக்க வியாபித்திருக்கும் மனித தலைகள் ,படத்தின் தலைப்பு இவையெல்லாம் ஒரு முழுமையான மதுரையை பார்க்கப் போகிற எண்ணத்தை நம்முள் விதைத்துப் போகின்றன.

ஒருத்தன் பயந்தான்கொள்ளி எலெக்ட்ரிசியன் ,இன்னொருவன் காதலில் அலையும் ஊமை,அடுத்தவன் வீடியோ எடுக்கிறவன்,மற்றவன் மின்சார இடுகாடு பராமரிப்பாளன், இப்படியாய் இருப்பவர்களுக்குள் வைகை பாரில் குடிக்குமிடத்திலிருந்து குடிகொள்கிறது நட்பு.

தெருவோர த்ரிசாவாக ஏரியாவிலும் ,டிவி யில் ராதா என்கிற அறிவிப்பாளராக அஞ்சலி.களவாணி(அஞ்சலி) ராதா ஆனதும்,தவிடன் (விமல்)கண்ணன் ஆனதிலிருந்தும் அவர்களுக்கான காதல் ஆரம்பம்... பிளாஷ் பேக்.

வில்லனின் மகனாக வருபவன் ,துணிக்கடை வைத்திருக்கும் நண்பன் உதவியுடன் ,பெண்களின் ஆடை மாற்றும் படத்தை தன் மொபைல் கேமராவில் பதிவு செய்து..அதை அந்த குறிப்பிட்ட பெண்களுக்கு MMS அனுப்பி அவர்களை அனுபவிக்கப் பார்க்கிறான்.இந்நிலையில் பாதிக்கப் பட்ட பெண் விபத்தாகிறாள்.

அதேபோல் இன்னொரு பொண்ணுக்கு பொறி வைக்கையில் ,எலிக்கு வைத்தப் பொறியில் புலி மாட்டினால் என்னாகும்..அப்படித்தான் ஆகிப் போகிறது நண்பர்களின் கதை.பொறி தவறி நாயகனிடம் போய்,வில்லன் மகனுடன் சண்டையிட்டு ,சிக்கலில் நண்பர்களும்..இப்போ நண்பர்களுக்குள்ளேயே மரண பயத்தை உண்டு செய்து நாயகனை முடிக்க வில்லன் எப்படி விவகாரம் பண்ணுகிறான்..விவகாரத்தில் யார் ,யார் எப்படி வில்லத்தனம் செய்கிறார்கள்..சிக்கல் எங்கே சிக்குண்டு போகிறது என்பதுதான் கதை.

கதையில் சில இடங்களில் தொய்வு ஏற்ப்பட்டாலும் விறுவிறுப்பாகத்தான் போகிறது.நடிகர்களும்,ஏனைய அறிமுகங்களும்,இயக்குனரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள்.கேமராகோணம் மிக அருமை.இயல்பாக போன கதை கிளைமாக்சில் சினிமாப் பூச்சானது நம்மை கொஞ்சம் சலிப்பூட்டச் செய்கிறது .

நாம் எதிர்ப் பார்த்த முழுமையான மதுரை மேப்பில் மட்டுமே இருந்தது.படத்தில் இல்லை என்பது கொஞ்சம் ஏமாற்றமே.மற்றபடி படம் பார்க்கலாம் ரகம்!

தூங்கா நகரம் நம்மை தூங்க வைக்கிற ரகமில்லை.!

Widget byLabStrike


No comments:

Post a Comment