Tuesday, January 25, 2011

டாக்டர் கேப்டன் எஞ்சினியர் அழைக்கிறார்!

பயணத்தில் நம்மைக் கடக்கும் மரங்கள்,பக்கவாட்டு மாடமாளிகைகள்,குடிசைகள் கோபுரங்கள்,வாழ்வாதார வயல்கள்,மானுடர்களின் வாழ்வியல்கள்,பயண மனிதர்களின் முக இயபுகள்,உணர்வுகள் என்பன தவிர, எனது பயணப் பொழுதுகளை எப்போதும் வேறு எந்த விடயத்திற்காகவும் நான் விரயமாக்குவதில்லை.பயணத்தில் இரண்டு மூன்று முறை புத்தகம் படிக்க முயன்றிருக்கிறேன்.இசையில் லயிக்க ஏதேதோ செய்திருக்கிறேன்.ஆனால் அவையெல்லாம் என்னை தன் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வருவதில்லைஅவைகளால் எம்மைக் கட்டுப் படுத்த முடிவதுமில்லை.

ஏனோ வேடிக்கைப் பார்ப்பதிலும்,வாழ்வியலை ரசிப்பதிலுமே ஓர் தனி ரசனை உள்ளதாக உணர்வேன்.பயணத்தில் வரும் குழந்தையின் குறும்பு, குடும்ப சண்டைகள்,அன்யோன்யமான காதலர்கள்,நக்கலடிக்கும் நண்பர்கள் கூட்டம்,டாட்டா கட்டும் மரங்களின் பின்னோக்கிய அணிவகுப்பு என ரசிக்கிற விஷயங்கள் நிறைய இருக்கும் போது இசையில் நனைவதோ,புத்தகத்தில் மூழ்குவதோ எம்மைக் கவர்வதில்லை.ஓர் புத்தகத்தில் மூழ்கி,ஓர் இசைகோர்ப்பில் இணைந்து ஏனைய வாழ்வியல் நிகழ்வு நாவல்களையும்,இயற்கையின் இசை சுரத்தையும் சுவாசிக்க மறப்பதாய் உணர்வு.ஒவ்வொரு பயண அனுபவமும் ஓர் நல்ல அனுபவத்தை, ரசனையை,வேகத்தை எமக்கு தரும்.சில நேரங்களில் அவற்றை நினைவு படுத்தி சிலாகிப்பேன்.சில நேரம் கொதிப்பேன்.சில நேரம் சிரிப்பேன்.சிந்திப்பேன் என சொல்லிக் கொண்டே போகலாம்.

அப்படித்தான், எனது சமீபத்திய பயணத்தில் என்னை ரசிக்க வைத்த நிகழ்வு அது,என் பயண வழிநெடுக விஜயகாந்த் சேலம் மாநாட்டு பேனர்கள்...கேப்டன் அழைக்கிறார்,அண்ணியார் வருகிறார்,விருதகிரியார்,புரட்சிக் கலைஞர் அழைக்கிறார் என எத்தனையோ வாசகங்களில் அழைத்துக்கொண்டிருந்தார்  அவர்..

ஆனாலும் எமைக் கவர்ந்தது அந்த வாசகம் தான்...ரசிக்க வைத்தது ..கொஞ்சம் சிரித்து ருசிக்கவும்..

டாக்டர் கேப்டன் அழைக்கிறார்...

நல்லவேளை கேப்டன் எஞ்சினியரிங் படிக்கல..இல்ல டாக்டர் கேப்டன் எஞ்சினியர் அழைக்கிறார்னு போட்டிருப்பாங்க! :)

Widget byLabStrike


2 comments: