Wednesday, January 19, 2011

காவலன்-கவலையில்லாம கண்டிப்பா பார்க்கலாம்



இந்தமுறை பொங்கலுக்கு ஊருக்கு போகும் போது ஏதேனும் ஓர் திரைப்படத்தை ஊரிலேயே பார்த்து விட வேண்டியது என்ற தீர்மானத்துடன் தான் ஊருக்கு சென்றிருந்தேன்.அதற்கும் காரணம் இருக்கிறது.கிட்டத்தட்ட சென்னை வருவதற்கு முன், பத்து ஆண்டு காலம் கடந்திருக்கலாம் ,உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் திரைப்படத்தை ஆத்தூர் NS திரையரங்கில் பாக்ஸ் டிக்கெட்டில் பார்த்ததாக ஞாபகம்.நான் ஓவியக்கலூரி சேருவதற்கான ஆயத்தத்தில் இருந்தபோது நானும் என் சித்தப்பாவும் படம் பார்த்து விட்டு சென்னைக்கு பயணம் மேற்கொண்டதாய் நினைவு.அதற்குப் பின் என் ஊரில் படம் பார்க்கும் வாய்ப்பு இல்லாமலே ஆகி விட்டது.ஓரிரு நாட்கள் விடுமுறையில் ஊருக்கு செல்வதால் படம் பார்ப்பதற்கான கால அவகாசம் அதற்குப் பின்னும் இல்லை.நான் எண்ணியது போலவே இந்தமுறை காவலன் திரைப்படத்தை அதே திரையரங்கில் பாக்ஸ் டிக்கெட்டில் பார்த்து விட்டேன்.அன்று டிக்கெட் விலை 15 ரூபாய்..இன்று 50 ரூபாய்..பத்து ஆண்டுகளுக்கு முன் நான் பார்த்தப் படத்தில் ரோஜா கதாநாயகி,இன்று காவலனில் அதே ரோஜா அம்மா.வயது மாற்றம் அவரை மட்டுமல்ல என் எண்ணங்களிலும் கிழடு தட்டியிருந்தது.அன்று என் அருகாமையில் படம் பார்த்துக் கொண்டிருந்த சித்தப்பா.. இன்றில்லை.எத்தனை மாற்றங்கள்.காலத்தில் மட்டுமல்ல..விஜய்யின் காவலன் திரைப் படத்திலும்.சில ஆண்டுகளாக அதிரடியாக படம் கொடுத்து ,நாம் என்ன செய்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றிருந்த விஜய் காவலனில் இல்லை.பத்து ஆண்டுகளுக்கு முன் பவ்யமாய் காதல் செய்த அதே அடக்கமான விஜய்.காலமாற்றம் அவர் எண்ணத்தையும் பக்குவப் படுத்தியிருக்கிறது போலும். ஒரு டைரக்டர் ஹீரோவாக மாறியிருப்பது தெளிவாகிறது.படம் சலிப்பற்று போகிறது.என்ன ஒன்று..நான் ஏற்கனவே மலையாளத்தில் பாடி காட் படத்தை பார்த்து விட்டதால் திலிப்போடு ஒப்பிடும்போது விஜய் நடிப்பு கொஞ்சம் சலிப்பை தந்தது.ஆனாலும் முயற்சித்து நன்றாக பாராட்டும்படி செய்திருக்கிறார்,. மலையாளத்தில் லாஜிக்காக தெரிந்த நிறையக் காட்சிகள் தமிழில் லாஜிக் மிஸ்ஸிங்.. பரவாயில்லை..பொறுத்தருளும்படி தான் இருக்கிறது.சொந்தக் கதையை அதிகம் எழுதி விட்டதால் , கடைசி வரை தெளிவாக விமர்சனம் எழுத எண்ணியும் எழுத இயலாத நிலையாகி விட்டது எனக்கு..என்னையும் நீங்கள் பொறுத்தருல்வீராக..

கவலையில்லாம கண்டிப்பா பார்க்கலாம்.. பன்ச் டையலாக் இல்லாத, ஒரு மாறுப்பட்ட விஜய் படத்தை.

Widget byLabStrike


4 comments:

  1. அப்போ முந்தைய விஜய் படங்கள் போல இல்ல?!

    ReplyDelete
  2. நயன்தாரவின் நடிப்பு அசினிம் மிஸ்ஸிங். ரொம்ப டல்லாக இருப்பதாக நண்பனும் சொன்னான். சிறுத்தை பரவாயில்லை. ஆடுகளம் பார்ககனும்.

    இருந்தும் காவலனை வெற்றி படமாக அறிவித்துவிடுவோம். இல்லையென்றால் மீண்டும் சுறா பார்க்க நேரலாம் :-)

    ReplyDelete