Thursday, January 13, 2011

இந்த புத்தகத்தை இந்த ஆட்டோக்காரரிடம் கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள்!



அலுவலகம் முடிந்து மாலை ஆறரை மணியளவில் நண்பருடன் இரண்டு சக்கர வாகனத்தில், வெங்கட் நாராயணா சாலை வழியாக வந்துக் கொண்டிருக்கிறேன்,இந்த ஆண்டு புத்தக திருவிழாவிற்கு போக இயலாதன் காரணத்தை கலந்துரையாடிய வண்ணம்.அப்போதான் அந்த வழியே வந்த ஓர் ஆட்டோ,எங்கள் வழியை குறுக்கிட ,நண்பர் ஏதோ கூறியவண்ணம் ஆட்டோவை விரட்டுகிறார்.ஆட்டோவும் வேகமாக முன்னேறி செல்லவே நண்பரும் வண்டியின் வேகத்தை கூட்ட ஓரிடத்தில் அந்த ஆட்டோவை அருகாமையில் சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிட்டுகிறது.அப்போதான் ஆட்டோவுக்கு பின்னால் ஒட்டப்படிருந்த அந்த வாசகத்தை நண்பர் எமக்கு காட்டுகிறார்.

"பயணங்கள் தொடரவேண்டும்"

"இந்த புத்தகத்தை இந்த ஆட்டோக்காரரிடம் கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள்"-விலை 55 ரூபாய்-என்று ஒட்டப்படிருக்கிறது.

ஆசிரியரின் பெயர் சிறியதாக இருக்கவே இருட்டில் எம்மால் சரியாக அடையாளம் காண இயலவில்லை.தலைபிற்க்கேற்ற விளம்பர களத்தையும் ,அந்த ஆசிரியரின் வியாபார யுக்தியையும் கண்டு ஆச்சர்யம் கொண்டேன்.அவரின் விளம்பர யுக்திக்காகவே அந்த புத்தகத்தை அந்த ஆட்டோ காரரிடம் கேட்டு வாங்க வேண்டுமென, முயற்சித்து முன்னேறிய போது ,ஆட்டோ எங்களைக் கடந்து வெகுதொலைவில் விரைந்திருந்தது!

நண்பர் சொன்னார்...நீங்கள் புத்தக திருவிழாவை தேடுகிறீர்கள்.ஒரு புத்தகம் பாருங்கள் ஆட்டோ வாசகத்தில், வாசகர்களைத் தேடுகிறது என்று!


Widget byLabStrike


No comments:

Post a Comment