Monday, January 3, 2011

இரண்டு நாட்கள் கழித்து இன்றே பிறந்த புத்தாண்டு!



புத்தாண்டு நாடு கடந்த ஓர் அழைப்பில் அன்று எனக்கு பிறந்தது.அந்த அழைப்பு நான் எதிர் பார்த்து இருந்ததுதான்.ஆனால் முதல் அழைப்பாய் எதிர்பார்க்கவில்லை. இன்னொரு அழைப்பு என்னை இந்த இரண்டொரு ஆண்டுகளாய் எழுப்பி, வாழ்த்து சொல்வதை ,வாடிக்கையாய் கொண்டிருந்தது.அதற்கு மிக முக்கிய காரணமும்,அக்கறையும்,உரிமையும் ,உறவும் இருக்கிறது.நீங்கள் நினைக்கும் அந்த அக்கறை மிகுந்த உறவுதான் அவளுக்கும்,எனக்குமானது.ஆனால் சில காலத்தின் காரணம் சூழல் மாறியிருந்தது.அழைப்பு வரும்.வாழ்த்து எம் நெஞ்சை நிரப்பும் அந்த நிறைந்த மனதோடு புத்தாண்டு நிறையும் என்ற எதிர்பார்ப்பை ஏங்க வைத்து முடிக்கிறது புத்தாண்டின் முதல் நாள்.இரண்டாம் நாளும் அது போலவே..அவள் அழைப்பின்றி.. இன்று அலைபேசி எடுத்தவுடனே அவள் குறுஞ்செய்தியே என்னை குறுக்கிட்டு நிற்கிறது லேட் ஆனாலும் லேட்டஸ்ட் ஆன கருத்து சுமந்து.அவள் அனுப்பிய செய்தியாயிற்றே!சும்மாவா பின்னே!அடுத்த அரை மணி நேரத்தில் அழைப்புடனும் சந்திக்கிறேன் அவளை.புத்தாண்டு அன்று அழைக்க இயலாததன் காரணத்தை அழைத்து சொல்கிறாள் அவள்.பரவா இல்லை..சேவல் கூவி,புலரும் பொழுது,ஓர் பெட்டை கோழி கூவினானும் புலரும் என்பதை புரிய வைக்கிறாள் !புத்தாண்டு இரண்டு நாட்கள் கழித்து இன்றே பிறக்கிறது எனக்கு..அவள் அழைப்பில்.

Widget byLabStrike


8 comments:

  1. nice pic and article. wish you a pleasurable new year!

    ReplyDelete
  2. //புத்தாண்டு இரண்டு நாட்கள் கழித்து எனக்கு இன்றே பிறக்கிறது எனக்கு..அவள் அழைப்பில்//

    எப்படியோ பிறந்தா சரிதான்..

    ReplyDelete
  3. dai, konjam ovara pora mathiri irukku..... eppadiyoooo santhosama irundha sari....... enjoy......

    ReplyDelete