
தன் வாழ்நாளின் கடைசி மணித்துளிகளை, எண்ணிக்கொண்டிருக்கிறது 2010 ஆண்டு.இந்த ஆண்டு, சில, பல மறக்க இயலாத நினைவுகளை ,தன்வசம் சுமந்துள்ளது.ஒரு வருடம் பண்ணிரண்டு மாதங்கள் ,பல நாழிகைகள், பல நாட்கள் ,என நம் வசம் ஒவ்வொரு ஆண்டும், ஒப்படைத்துப் போனாலும் ,அதனில் மறக்க இயலா மணித்துளிகளை ,இனிமையை,வெறுப்பை சுக துக்கம் என தன் பரிணாம பக்கங்களாய் படர வைத்துள்ளது.எனினும் கால ஓட்டத்தில், சில நாட்கள் மறந்தும் போகின்றன மறக்க இயலாமலும் ஆகின்றன. அப்படி நான் மறந்த,மறக்க இயலாமல் என் மனதில் நிறைந்த ஏனைய பக்கங்களை இவ்வாண்டு சுமந்துள்ளது.சென்ற புத்தாண்டுக்கு முதல் வாழ்த்தை யார் எம்மிடம் முதலாய் பதிவு செய்தார்கள் என்பதிலிருந்து,அந்த புத்தாண்டு இரவை எப்படி கழித்தேன்,எத்தனை புது வரவுகள்,புது உறவுகளுக்கு சென்ற ஆண்டு பாலமானது,எத்தனை நட்பு என்னுடன் வளர்ந்து பலமானது என்பது வரை ஏனைய சுவடுகள் 2010 ஆண்டின் பக்கங்களில்! முக்கியமாய் பதிவுலகம்,அதனால் பரிச்சயமான தோழமைகள்,முகநூல் நட்பின் முகவரிகள்,என எந்த ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு நிறைய நண்பர்களை நிறைவாகவே தந்து சென்றது!அதற்காய் 2010 ஆண்டுக்கு நான் நன்றி சொல்ல கடமைப் பட்டவனாகிறேன்.
ஒவ்வொரு ஆண்டின் கடைசி மூச்சும் , எம் முகத்தில் உமிழ்ந்து , நமட்டு சிரிப்புடன் அந்தக் கேள்வியை மட்டும் கேட்டு விட்டுப் போகும்..சென்ற ஆண்டின் பிறப்பில் லட்சியமாய் ஏதோ கொள்கை வகுத்துக் கொண்டாயே.என்ன செய்து கிழித்தாய் என்று.நானும் அலட்டிக் கொள்ளாமல் அதே கொள்கையை இவ்வாண்டில் ஏற்கிறேன்,இவ்வாண்டில் செய்து முடிப்பேன் ,என்று மீண்டும் மீண்டும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன்.. காலத்தை அல்ல..எம்மை!
நண்பா இனிவரும் ஆண்டு நம் கனவுகளையும் லட்சியங்களையும் நிறைவேற்றி இனிய நிகழ்வுகளை அளிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே!.
ReplyDeleteமகிழ்சிகரமான ஆண்டிற்கு வாழ்த்துக்கள் கோடி தோழரே
ReplyDeleteநீ மட்டும் அல்ல நண்பா… துணைக்கு நிறைய தோழர்கள் இருக்கிறார்கள்…. தம்மை தாமே ஏமாற்றிக் கொண்டு…. உன்னையும் என்னையும் போலவே…. காலம் கடந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….
ReplyDeleteநன்றி நண்பரே....
ReplyDeleteநன்றி நண்பரே...
ReplyDelete