Sunday, December 26, 2010

மன்மதன் அம்பு எங்கே போனது!திரைவிமர்சனங்களும்,நண்பர்களின் கருத்துகளும் கேட்டு விட்டு எவ்வித எதிர்ப்பார்ப்புமற்று தான் மன்மதன் அம்பை பார்க்கப் போயிருந்தேன்.எவ்வித பில்டப்,சலனமில்லாமல் படத்தின் தலைப்பு வருகின்ற போதே ஓர் எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது.சூர்யா ,த்ரிஷா மன்னிக்க அம்புஜா பாடல் காட்சியுடன் படம் ஆரம்பமானது.படத்திலும் நடிகையாக த்ரிஷா. பணக்கார காதலனாக மதன் மாதவன்.த்ரிஷாவின் மேல் சந்தேகப் பிராணியாக திரிகிறார்.

மாதவனின் ஹமர் கார் ஓட்டி வரும் போது த்ரிஷா ஓர் விபத்தை நிகழ்த்திவிடுகிறார்.அந்த இடத்தில் ஓர் சம்பாசனையுடன் வெறுப்பில் காதல் அவர்களுக்கிடையில் பிளவாகிறது.இப்போ .வெளிநாட்டிற்கு சுற்றுப் பயணத்திற்கு போயிருக்கும் த்ரிஷா,அவர் தோழியாக சங்கீதா அவரின் இரண்டு குழந்தைகள் என அங்கு கதை வருகிறது.ஹீரோ என்ட்ரி... சந்தேகப் பிராணி மாதவன் ,திரிசாவை நோட்டம் விட நியமித்திருக்கும் மேஜர் மன்னாராக கமல்.நண்பனின் மருத்துவ தேவைக்காக அவர் இந்தப் பணியை ஒப்புக்கொண்டு த்ரிஷா நல்லப் பெண்தான் என மாதவனிடம் சர்டிபிகேட் தர,இதை காரணம் காட்டி மருத்துவ தேவைக்கானப் பணத்தை மாதவன் தராதிருக்க,ஹீரோ கதையில் புது கதை பின்னுகிறார். அப்போ பணம் கிடைக்க ஆரம்பிக்கிறது.அந்தப் பின்னலில் த்ரிஷா,சங்கீதா,கமல்,மாதவன் என யார் யாரோடு பின்ணிப் போகப் போகிறார்கள் என்பதுதான் பின்னணி கதை.

விமர்சனங்களைப் படித்து ஐயோ திரையரங்கில் அமரவே முடியாதோ,அவ்வளவு மொக்கையோ என்கிற அளவுக்கெல்லாம் படம் சலிப்பத் தரவில்லை.பாடல் காட்சியமைப்புகள்  அருமை.நடிகர்களின் நடிப்பு பிரமாதம்.கமல் பற்றி சொல்ல தேவையில்லை.மாதவன் குடிகாரராக பின்னிஎடுதிருக்கிறார்.சங்கீதா வயசுப் பசங்களுக்கு வாவ்,அவர் பேசும் வசனங்களையும் சேர்த்து..குடும்பத்தோட போறவங்க தான் கொஞ்சம் குற்ற உணர்வோட உக்காரணும்.சங்கீதாவின் பையனாக நடித்திருக்கும் சின்னப் பையன் எல்லோரையும் தூக்கி சாப்பிடுகிறான் நடிப்பில்.

இரண்டாம் பாதி வழக்கமான கிரேசி மோகன் பாணியில் கமல் எழுதிய வசனங்கள் ,சீன்கள் நடிகர்களுக்குள் வரும் குழப்பத்தை பார்வையாளனுக்குள்ளும் இறக்கி விடுகிறது.

கமலின் மேதாவித்தனமான சில வசனங்கள் என்னை வெறுப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றன.கதையில் ஆரம்ப காட்சிகளில் கார் ஓட்டுனராக வரும் ஈழத்து தமிழனை திரிசாவுக்கு காலுக்கு செருப்பாக நடிக்கவும் தயாராய் இருக்கிறேன் என்று சொல்வது,மாதவன் பேசும் போது தமிழ் இனி மெல்ல சாகும் ன்னு சொல்லி வசனத்தை டம்மியாக்கி பேசுவது.இன்னும் சில இடங்களில் தமிழ் தேவையில்லாமல் இழுக்கப் பட்டு தரம் தாழ்த்தப் படுவதுபோல் தோன்றுகிறது(ஏற்கனவே இந்த வேலையை தசாவதாரத்திலும் செய்திருப்பார்)..அதை தவிர்த்திருக்கலாம்.கமல் காமெடி என்றாலே, ஐயோ இப்படித்தான் (சா)கடிப்பார் என்கிற எண்ணத்தை அவரின் சமீபகால படங்கள் உணர்த்தி விடுகின்றன.கிளைமாக்ஸ் ரொம்ப ஆவரேஜ்.

"அர்ஜுனன் பார்வை மன்மதனுக்கு இல்லை..அதுதான் அம்பு குறி தவறி இருக்கிறது!"


Widget byLabStrike


No comments:

Post a Comment