Saturday, December 18, 2010

ஈசன்- (தெளிவில்லாத) மோசன்!ஈசன்..படத்துக்கு போலாம்னு தீர்மானிக்கும் போதே வானம் மப்பும்,மந்தாரமுமாகத்தான் காட்சியளித்தது.மெதுவா சாரல் போன்று மழையும் பொழிய தொடங்கி இருந்தது.நண்பர் சொன்னார் மச்சி நல்ல கிளைமேட்டா இருக்கு.லைட்டா ஒரு கட்டிங் விட்டுட்டு போனா சூப்பெரா இருக்குமுன்னு.

நான் வேண்டாம் அப்புறம் படத்துல கவனம் இருக்காது.இது சாதாரண இயக்குனர் படம்னா பரவாஇல்ல..

சுப்ரமணிபுரமெடுத்து தமிழ்நாட்டையே கலக்குன ஒரு இயக்குனரோட படம்னு ஏக எதிர்பார்ப்போட போனேன்.அடடா..படத்தோட ஆரம்பமே அசத்தல். வானத்தைப் போலவே படமும் மப்பும்,மந்தாரமுமாக ஆரம்பித்தது..படத்துல பசங்க ,பிகர்கள் கூட பப்ல தண்ணி அடிச்சுட்டு இருந்தாங்க.செம கலர்புல்,கலர்புல் லைட்ஸ்,ஒரு பாட்டு வேற..ஆஹா..படம் ஆரம்பமே அசத்துதேன்னு,நானும் அசந்து உக்காந்தேன்..

அசந்தவன் அசந்தவன்தான்..எழுந்து சீட் நுனிக்கு வரவே முடியல..படத்துல நாயகர்கள் அடிச்ச தண்ணில படம் பாக்குற எனக்கு மப்பு ஏறி போச்சு போல!படம் பாட்டுக்கு போய்ட்டிருக்கு..அங்கங்க பாட்டு வந்துட்டிருக்கு.NIFT ஸ்டூடெண்ட்ஸ் னா அப்படித்தான் இருப்பாங்கன்கிற தவறான எண்ணத்தை உருவாக்குது.மோக்கவுக்கு நல்ல விளம்பரம்!

ஒரு ஆக்சிடென்ட் ,விசாரணை,அரசியல் தலையீடு,அமைச்சர் பையன்,மல்லையா ரேஞ்சுக்கு பணக்காரர் அவருக்கு ஒரு பொண்ணு ,அவங்ககுள்ள ஒரு காதல்,கதாநாயகனுக்கு மண்டைல அடி,....ஹ்ம்ம்..அப்பா...இருங்க மூச்சு வாங்குது

.........................இடைவேளை.........................


ஈசன் பள்ளி மாணவன் அறிமுகம், ப்ளாஷ் பேக்,கிராமம்,பசுமை,தேவதை அபிநயா தரிசனம்,கோவில் விசேசம்,சென்னை வராங்க அபிநயா பாமிலி,சென்னை வாசம்,NIFT ,திரும்ப பப்பு,திரும்ப சரக்கு,அரைகுறை பெண்கள்,உரசல் ஆட்டம்,பர்த்டே பார்ட்டி,அங்க ரேப்,அப்புறம் தற்கொலை,ஈசன் ரூபம் அப்டியே போகுது..

இழுவைதான் ..எப்போ படம் முடிப்பாங்கன்கிற பீலிங் வந்துடுச்சி.அப்போதான் நண்பர் சொன்னதோட அர்த்தம் எனக்கு புரிஞ்சது.ஒரு கட்டிங் விட்டுட்டு வந்திருக்கலாம்!

சத்தியமா சசி உங்க கிட்ட இத நான் எதிர்ப் பார்க்கல!விக்ரம் தயாரிப்பிலிருந்து விலகுனதுக்கான காரணம் புரியுது.

காமெரா கோணம் மிகவும் அருமை!லொக்கேசன் கலக்குது!நடிப்பெல்லாம் நல்லாதான் இருக்கு!இன்னும் கொஞ்சம் கதையில் மெனக்கெட்டிருக்கலாம்.

Widget byLabStrike


19 comments:

 1. சசி ஏமாத்திட்டாரா!

  ReplyDelete
 2. .//படத்துல நாயர்கள் அடிச்ச தண்ணில படம் பாக்குற எனக்கு மப்பு ஏறி போச்சு போல!படம் பாட்டுக்கு போய்ட்டிருக்கு//
  :))

  ReplyDelete
 3. oh sad...ellam inthak kamarsial pothai seiyum velai

  ReplyDelete
 4. என்ன?..................
  படைப்பாளி அண்ணே......................
  சசியோட படைப்பு அவ்ளோதானா?....................

  ReplyDelete
 5. யானைக்கும் அடி சறுக்கும்..
  அடுத்த படைப்பு நன்றாக தருவார் என நம்புவோம்!

  ReplyDelete
 6. என்னோட கருத்து தான் நண்பா..மக்களுக்கு பிடிக்கவும் செய்யலாம்!

  ReplyDelete
 7. இந்தப் படத்தைப் பார்க்கவேணாம்.நேரம் மிச்சம்ன்னு சொல்றீங்க !

  ReplyDelete
 8. நேற்றுதான் ஈசன் பாரத்தேன். படத்தின் ஒன்லைன் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் திரைக்கதையில் சுவாரசியம் இல்லை. காட்சிகள் தனித்தனியாக தொடர்பின்றி இருந்தன. அரசியல்தான் தற்போதைக்கு மிகவும் சக்தி வாய்ந்தது என்பதை தொட்டு படத்தின் கதை அங்குமிங்கும் நகர்ந்து சென்று விட்டது. ஏன் இப்படி நடந்தது என்பது இயக்குநருக்கு மட்டுமே வெளிச்சம்.

  ReplyDelete
 9. நிச்சயம் பாருங்க ஒரு அனுபவம் தானே!

  ReplyDelete
 10. ஆமாம் நண்பரே..கதையில் தெளிவின்மையே படத்தின் பாதையை திசை திருப்பி விட்டிருக்கிறது .

  ReplyDelete
 11. 2010 முடிவு தமிழ்ரசிகர்களுக்கு போதாத காலம் போல,.. சரிவிடுங்க.

  தெலுங்கில் அருந்ததி, மகதீரா போல கலக்கலாய் ஒரு படம் உருவாயிருக்கிறது. ஹாலிவுட் படம்தான் என்று அடிச்சு சொல்லாம். டிரைலர் இதோ!.

  http://www.youtube.com/watch?v=qcGgMCFmDIo&feature=player_embedded

  ReplyDelete
 12. ஆமாம் நண்பரே...தெலுங்கு சினிமா நல்ல பாதையை நோக்கி போய்கொண்டிருக்கிறது..கமர்சியல் என்றால் முழுக்க கமர்சியல்.நேர்த்தி என்றால் நேர்த்தி என்கிற ரீதியில் இயங்குகிறது.நம் சினிமாவை போன்று இரண்டையும் அவர்கள் சேர்த்து குழப்புவதில்லை.
  மிகவும் அருமையான நேர்த்தியான ட்ரைலர்..தயாரிப்பு வால்ட் டிஸ்னி ஆச்சே!

  ReplyDelete