Monday, December 6, 2010

அந்த ஒற்றை முத்தத்திற்காய்!



என்னை பார்க்க வாடா என்று நீ அழைத்த போதெல்லாம்,நானும் பார்த்திருக்கிறேன்.மழை வந்து எம்மை நனைத்திருக்கும்.நனைந்த உடலும்,நடுங்கிய குளிருடனுமே உன்னை சந்தித்திருக்கிறேன்.எனக்கு முன்னால் வருணனுக்கு அழைப்பு விடுத்துவிட்டே நீ எம்மை அழைப்பாய் போலும்!மழையை பார்த்து வராமல் இருக்கிறானா,இல்லை நம் மீதுள்ள காதலில் வந்து போகிறானா என்று நீ அறிகிறாயோ என்னை, அதுவும் நான் அறியவில்லை!இல்லை உன் மேலுள்ள காதலில் ,என் மேலுள்ள பொறாமையில் வருணன் உன்னை பார்க்க விடாமல் செய்வதற்காய் எம்மை நனைத்தானோ அதுவும் தெரியவில்லை.உனக்கும்,எனக்கும் அப்படியோர் ராசி..எப்படியோ மழையில் நனைந்து,குளிரில் நடுநடுங்கி சேற்று ரோட்டில் இறங்கி வருவேனே உம்மை பார்க்க.நீ இடும் அந்த ஒற்றை முத்தத்திற்காய்!அது போதும் வாட்டிய வருணனை வாட வைக்க!உன்னையே என் மனது தேட வைக்க!இப்போதெல்லாம் நினைக்ககூடாது என்றே நினைத்திருக்கிறேன்..நீ இன்னொருவன் மனைவியானதால்!இருந்தும் மழைக்காலங்கள் என்னையும் அறியாமல் உன்னையே நினைவு படுத்துகின்றன!


Widget byLabStrike


No comments:

Post a Comment