Friday, November 26, 2010

நான் தமிழனாய் பிறந்தது,கர்வம் கொள்வதற்கு!


இனமானம் இல்லாதோரால்
தன்மானம் இழந்தோரால்
தமிழ் சொல்லி பிழைப்போரால்
எம்மினம் இறந்தபோது
இயலாமையில்
கைகட்டி ,வாய்பொத்தி
நின்ற
எம்மைப் போன்றோரால்..
இப்படி ஆயிரம் காரணம்
அடுக்குவேன்
நான் தமிழனாய்
பிறந்ததற்கு
கவலைப் பல கொண்டதற்கு!

எம்மினத்தில் இப்படியோர்
தலைவன்
தன்னலம் பாராது
இனநலம் காப்பவன்!
தமிழினத்தை தலைநிமிர்த்த
எம்மினத்தில் வாய்த்தவன்!
என்ற ஒரே ஒரு காரணம்
போதும்
நான் தமிழனாய்
பிறந்ததற்கு
கர்வம் பல கொள்வதற்கு!

வாழ்க தலைவா!வளர்க நின் புகழ்!!
ஈழம் வெல்லும்!அது நின் பெயர் சொல்லும்!



Widget byLabStrike


9 comments:

  1. மறக்க நினைத்தாலும் மறக்கமுடியாத மறத்தமிழன்.சரித்திர நாயகன்....அண்ணாவாய் தம்பியாய் எங்கள் உயிர்ச்சகோதரன்.சொற்களுக்குள் அப்பாற்பட்டவன்.மூச்சோடு வாழ்பவன் !

    ReplyDelete
  2. ஆமாம் தோழி..நம் மூச்சிலும்,பேச்சிலும் முழுதாய் நிறைந்தவன்..எம் தமிழ் தகப்பன்..வாழ்க நின் பல்லாண்டு!

    ReplyDelete
  3. அவர் சென்ற பாதை வன்முறைகள் நிறைந்ததாய் இருந்தாலும் நோக்கத்திற்காக வீர வணக்கங்கள்!

    ReplyDelete
  4. வன்முறை என்பது தவறான புரிதல் தோழரே.இந்திய ராணுவமும் எதிரியிடம் அகிம்சா வழியில் போராடுவதில்லை..ஆயுதம் ஏந்தியே காவல் நிற்கிறது.ஆயுதம் எடுத்தவர் அனைவரும் வன்முறையாளர் இல்லை..போராளியும்,தீவிரவாதியும் நோக்கத்தில் வேறுபடுகிறார்கள்.பிரபாகரன் என்ற போராளியை தீவிரவாதி போன்று அடையாளப்படுத்த இந்திய அரசும்,இங்குள்ள ஊடகங்களும் முயற்சிக்கின்றன.
    அறமொடு போரைப் புரிந்த போராளி அவர்.புரட்சியாளர்.தமிழின காப்பாளர்..தமிழினத்தை தலைநிமிர்ந்து வாழவைக்க போராடியவர்.தமிழினத்திற்கான தன்னலம் பாராத ஒரே தலைவர்.

    ReplyDelete
  5. ஊடகங்களும் அரசியல்வாதிகளும் அவரை அப்படிப்பட்டவராய் காண்பித்ததால் சாதராண பொதுமக்களுக்கு தவறான புரிதலே ஏற்படுகிறது!

    ReplyDelete
  6. ஆமாம் நண்பரே.அனைத்து ஊடகங்களும் அரசியல் சார்ந்தவை.அதனால்தான் அரசியலுக்கு சாதகமாக சாயம் பூசுகின்றன.
    முடிந்த அளவு நாம் அறியாதவர்களுக்கு அவரைப் பற்றி தெரியப்படுத்துவோம்.

    ReplyDelete
  7. tamilan iruka perumai paduvadhai vida garvam kolvom!!!.....
    tamil valzga! valaruga!....
    tamil thalaivanuku thalai vananguvom.....

    ReplyDelete
  8. இனமானம் இல்லாதோரால் தானே
    இவ்வழவு இழிவுகண்டோம்.
    எம்தலைவன் இருந்திருந்தால்
    கைதடியில் குடிவருவானோ ???
    அண்ணன் வருவான் தன்பணி தொடர்வான்
    அதுவரை பொறுப்போம் .

    அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    உங்கள் பணி தொடரட்டும் நன்பனே .

    ReplyDelete
  9. வீரவணக்கங்கள்!

    ReplyDelete