Tuesday, November 23, 2010

ரைசென் சைன்-ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஓவியக் கண்காட்சி


ரைசென் சைன் -லலித்கலா அகடெமியில் தற்போது ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஓவியக் கண்காட்சியின் பெயர்.இந்த ஓவியக் கண்காட்சி நாம் நினைப்பது போன்று பெரிய வளர்ந்த,வளரும் ஓவியர்கள் படைத்த, தனது படைப்பை கண்காட்சியாக அரங்கேற்றும் நிகழ்வன்று.முழுக்க முழுக்க குடும்பத்தால்,சமூகத்தால் நிராகரிக்கப்பட்ட,அனாதையாக்கப்பட்ட,வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டு இப்போது சீர்திருத்தப்பள்ளியில் இருக்கும் 18 வயதுக்கு குறைவான மாணவர்களால் படைக்கப் பட்ட படைப்பாகும்.ஓவியர் லலிதா தன் தனிப்பட்ட முயற்சியால் அந்த மாணவர்களுக்கு ஓவிய பயிற்சிக் கொடுத்து,அந்த மாணவர்கள் படைத்த சிறந்த 450 ஓவியங்களை கண்காட்சியாக அரங்கேற்றி இருக்கிறார்.ஒவ்வொரு படைப்பும்,அந்த மாணவர்களின் திறமையை,அவர்களின் அலாதியான கற்பனையை,எடுத்துக் காட்டுகின்றன.ஒவ்வொரு ஓவியமும் யோசிக்கவைக்கின்றன!நளினமாக இருக்கின்றன!நம்மை பேச வைக்கின்றன!ஓவியக் கண்காட்சி நவம்பர்15 இல் இருந்து நவம்பர் 28 வரை நடைபெறுகிறது,தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பெரும்பான்மையான ஓவியங்களின் விலை ரூ 500 இருந்து 1000 தில் தான்.விற்பனையாகும் ஓவியங்களின் வருவாயை அந்த சீர்திருத்தபள்ளி மாணவர்களின் படிப்பு உதவிக்காக கொடுக்க உள்ளார்கள்.

நாம் எவ்வளவோ தேவைற்ற செலவுகளை செய்கிறோம்.நண்பர்களுக்கு உறவினர்களுக்கு ஏதேனும் வித்தியாசமான பரிசு வாங்கித் தர யோசிக்கிறோம்.யோசிக்காமல் போய் வாங்கலாம் அந்த ஓவியங்களை!அது அந்த மாணவர்களின் நல உதவிக்கு பயன்படும்.

ஓவியங்களைப் பார்த்து அவர்களின் அளப்பரிய சிந்தனையைப் பார்த்து மெய்சிலிர்த்து போய் விட்டேன்.என்னை சிந்திக்க வைத்த ஓவியங்களில் சில..

கடல் மேலே,வானம் கீழே,மேகத்தை படகாக்கி பயணம் போகின்றன யானையும்,பறவைகளும்...இதை வரைந்தது ஓர் சிறு மழலையாம்..அவளது சொந்த சிந்தனையாம்!என்னே கற்பனை!

----------------------------------------------------------------------------------------------

உலக வெப்பமயமாதலில் பூமி எரிந்து நோய்வாய்ப் பட்டு படுக்கையில் கிடக்கிறது..மரம்,நீர்,காற்று என இயற்கையை குளுக்கோஸாக ஏற்றுகிறார்கள்..சிந்தனையின் ஆழம் தான் என்ன!

---------------------------------------------------------------------------------------------

நீங்களும் மெய்மறக்க!

இடம்:
லலித்கலா அகடெமி,
ரீஜினல் சென்டர்,4 கிரீம்ஸ் ரோடு,
சென்னை-6

------------------------------------------------------------------------------------------------


Widget byLabStrike


No comments:

Post a Comment