Tuesday, November 16, 2010

காதலாலே தமிழ் வாழ்கிறது!



  • ஆங்கில நுனிநாக்கும்


வடமொழி கலந்த

பெயருமாய்

எம்மில் அகம் புகுந்து

ஆக்ரமித் திருந்தாள்

எம் காதல் நாயகியாய்

-அந்நாளில்..

  • இன்று


இன்னொருவன்

மனைவியானவள்.

  • நாம் பெற்றெடுக்கும்


குழந்தைக்கு

தமிழில்தான் பெயர்

வைத்திட

வேண்டுமென்று

நான் கூறிட்ட

நேரங்களிலெல்லாம்

எமை குறுக்கிட்டு..

  • வடமொழி கலந்தே


நாகரிக

பெயர் வைப்பேன்

என்று என்னிடம்

காதல் காலத்தில்

கடிந்து கொண்டவள்.

  • இன்று


அவள் மகிழ்வோட

பெற்றிட்ட மழலைக்கு

பெயர்வைக்க

கணவனுக்கு தெரியாமல்

கோரிக்கை ஒன்றை

வைக்கின்றாள்!

  • காலம் செய்தக்


கோலத்திலே

உமை-எம்மால்

கைபிடிக்க தான்

இயலவில்லை.

எம் குழந்தைக்கு

வைப்பேன்-

நீ விரும்பிய தமிழ் பெயரை!

  • காதலாலும் தமிழ் வாழ்கிறது!



Widget byLabStrike


14 comments:

  1. //காதலாலும் தமிழ் வாழ்கிறது//
    super

    ReplyDelete
  2. சூப்பர்! அழகான கவிதை!

    ReplyDelete
  3. kavithai nalla iruku
    azlamavum azlagavum irukum

    ReplyDelete
  4. கடைசி வரி தூக்கல் நண்பா.

    ReplyDelete
  5. நல்ல கவிதை..
    பல பேர் கவிதை எழுத ஆரம்பிப்பதே காதலிக்க ஆரம்பித்தவுடன்தானே.. நிச்சயமா காதலால் தமிழ் வள‌ருதுங்க...:)

    ReplyDelete
  6. இப்படியும் தமிழை வளர்க்கலாமோ?

    ReplyDelete
  7. thalaipai padithavudan ellarum ninaipathuk kavithaiyai...aanal tholar neengalo athaiyum thisai thirupik puthumai seithullir..valarka um pani

    ReplyDelete
  8. mikka nandri tholar...meendum vaarungal..thangal karutthaip pagirungal!

    ReplyDelete
  9. ஹா..ஹா..அதிகமாக காதலாலே தான் மொழி வளர்கிறது!

    ReplyDelete