Tuesday, November 9, 2010

நெஞ்சில் நின்ற பயணம்!



ஊருக்கு சென்று நான்கு நாட்கள் நல்லக் காற்றை சுவாசித்து நேற்றுதான் சென்னை திரும்பினேன்.போகும் போது காலையே கோயம்பேட்டிலிருந்து கிளம்பி ஊரை சுற்றி,பஸ் பன்சர் ஆகி ஒருவழியாய் சொந்த ஊர் போய் நடுஇரவில் சேர்ந்தேன்.வரும்போது கூட்ட நெரிசல்..ஊரிலிருந்து நின்று கொண்டே வரும் நிலை.என்ன கொடுமைடா இது என்றுதான் எண்ணி பேருந்தில் ஏறி நின்றேன்.எப்போதும் நான் போகும் பேருந்தில் மட்டும் தேவதைகள் வருவதே இல்லை..பக்கத்து பேருந்துகளிலோ ஏனைய தேவதைகள் அமர்ந்திருப்பார்கள்.ஆனால் எந்த (ஆ)சாமி புண்ணியமோ தெரியவில்லை..நேற்று நான் வந்த பேருந்தில் ஏனைய தேவதைகள்.அதுவும் நான் நின்று வந்த இருக்கையின் அருகாமையில் இரண்டு பேர்.

கண் கண்ணாடி போட்ட தேவைதையின் கடைக்கண் பார்வை கண்ணாடியையும் தாண்டி என்னில் விழுந்திருந்தது.(நம்மளையும் ஒருத்திப் பாக்குறா..ஹீ..ஹீ )அவளின் கெண்டை விழிப் பார்வை என்னில் கொண்ட அதிர்வலைகளுக்கு அளவே இல்லை.அப்பப்போ உற்று நோக்கினாள்..அண்ணலும் நோக்க..அவளும் நோக்க அழகாய் அமைந்தது பயணம்.நின்ற போதிலும் கால்வலி இல்லை.பசி வரவில்லை.பயணம் களைப்பை தரவில்லை.மேல்மருவத்தூரில் இறங்கி விட்டாள் அந்த கண்ணாடி தேவதை.பேசியிருக்கலாமே..விட்டு விட்டோமே நல்லதோர் வாய்ப்பை.கூட என் தமையன் வேறு வருகிறான்.என்ன செய்வது!அப்போதான் மனது களைத்துப் போயிருந்தது...வரும்போது பன்சர் ஆன பஸ் இப்போ ஆகி இருக்ககூடாதா..மனது ஏங்கியது.

விடுடா கவலையை என்கிற ரீதியில் அவளை விடவும் அழகு மிகுந்த இன்னோர் தேவதை அந்த நிறுத்தத்தில் ஏறினாள்.என் அருகாமையில் நின்று வந்த அவள் இன்னும் இருக்கிற பயண தூர களைப்பிற்கான மருந்தை எடுத்துக் கொண்டாள்.பார்க்காதது போல் பார்த்தாள்..நோக்காதது போல் நோக்கினாள்.அந்தப் பார்வையிலும் ஓர் நோக்கம் தெரிந்தது.அருகாமையில் அவளுடன் அவள் தந்தை வேறு.திருட்டுப் பார்வையில் தெரியாமல் நெஞ்சைக் களவாடிக் கொண்டு வந்தாள்..பயண நேரத்தையும்.

ஊரில் கொண்டாடாத தீப ஒளி வரும் போது பயணத்தில், பார்வைகளின் ஒளியில் அழகாய் நிறைவேறியது.இனிதாய் அமைந்தது (நெஞ்சில்)நின்று வந்தப் பயணமும்..

Widget byLabStrike


16 comments:

  1. எல்லாம் சரி உன் நிஜ ேதவைதக்கு இந்த (கானல்்) ேதவதைய பற்றி ெதரீயு மா ?.....mmm......

    ReplyDelete
  2. அய்யய்யோ... வம்புல மாட்டி விடுறீங்களே!!

    ReplyDelete
  3. ippudiye ethnanaaluthaan panrathu?

    ReplyDelete
  4. //ஊருக்கு சென்று நான்கு நாட்கள் நல்லக் காற்றை சுவாசித்து நேற்றுதான் சென்னை திரும்பினேன்.//

    குடுத்து வச்சவருங்க.

    ReplyDelete
  5. //அண்ணலும் நோக்க..அவளும் நோக்க அழகாய் அமைந்தது பயணம்.//

    ஆஹா

    ReplyDelete
  6. ஆஹா

    ஹா..ஹா..நன்றி நண்பா

    ReplyDelete
  7. விழாக்காலத்திற்கு மட்டுமே விசேசமான காற்று..

    ReplyDelete
  8. பஸ் டிக்கெட் எடுத்திங்கில????.....
    செக்கர் வந்தாரா?????.......................
    மாட்டலையே?????...........................

    ReplyDelete
  9. // கண் கண்ணாடி போட்ட தேவைதையின் கடைக்கண் பார்வை கண்ணாடியையும் தாண்டி என்னில் விழுந்திருந்தது //
    கலக்குங்க‌...

    //மேல்மருவத்தூரில் இறங்கி விட்டாள் அந்த கண்ணாடி தேவதை.பேசியிருக்கலாமே..விட்டு விட்டோமே நல்லதோர் வாய்ப்பை//
    மிஸ் பண்ணிட்டீங்களே :|

    //அவளை விடவும் அழகு மிகுந்த இன்னோர் தேவதை அந்த நிறுத்தத்தில் ஏறினாள்.//

    அதானே.. ஒன்னு இல்லைன்னா இன்னொன்னுன்னு போயிட்டே இருக்கணும்.. :)..

    ReplyDelete
  10. டிக்கெட்டா அப்டீனா!!

    ReplyDelete
  11. enna nanbare... mudivu edupathil thamthikka vendaam.... vaippugal nazhivividum...

    ReplyDelete