Sunday, November 7, 2010

கனவில் வந்த கவிதை !



கவிதை எழுத

காகிதம் தேடினேன்

எழுதினேன்

கிறுக்கினேன்

கசக்கினேன்

கடைசிவரை

வரவில்லை

கவிதை.

களைத்துப் போய்

கண்கள் அயர்ந்து

உறங்கிப் போனேன்.

நான் தேடிய

கவிதையொன்று

கனவாய்

வந்தது.

எழுத காகிதமற்ற

அப்பொழுதில்..

 

Widget byLabStrike


4 comments:

  1. அழகு!
    //நான் தேடிய

    கவிதையொன்று

    கனவாய்

    வந்தது.

    எழுத காகிதமற்ற

    அப்பொழுதில்..// நான் மிகவும் ரசித்தேன்!

    ReplyDelete
  2. கனவிலும் கவிதை தான?...
    கலக்குங்க...........

    ReplyDelete