Wednesday, November 3, 2010

உம் திருமணத்திற்குப் பின்னும்..



சமூக வலையமைப்பின்

அறிமுகத்தில்

எழுத்துகளை தட்டி தட்டி

தேய்ந்த விரல்களில்

உன்னை ஆன்லைனில் பார்த்து

அகமகிழும் பொழுதுகளில்

என் கணினி கீ போர்டில்

இல்லாது போன எழுத்துகளில்

அலைபேசியில் தாரை

வார்க்கப்பட்ட தருணங்களில்

தனிமையின் அமைதி நிறைந்த

பொழுதுகளில்

தூக்கம் தொலைந்து

தொலைத்த இரவுகளில்

இன்னும் தொலைந்து

போகாமல் இருக்கிறது.

உம் திருமணத்திற்குப்

பின்னும்..

நம் நினைவும்

நமக்கான காதலும்.



Widget byLabStrike


No comments:

Post a Comment