Tuesday, November 2, 2010

அன்பின் அருகாமையில் கோழை!

உடல்நிலை

சரியில்லாமல்

உனக்கு ஊசிப் போடும்போதும்

கலவரத்தின் போது

கல்லெறிந்தவனை

நீ எதிர் கொண்டு நடந்தபோதும்

தெருநாய் விரட்டியதில்

நான் திக்கு தெரியாமால் ஓட

நீ மட்டும் திமிறி நின்றபோதும்

விபத்தில்

உனக்கு பலமாய் அடிப்பட்டு

நீ எழுந்து நடந்த போதும்

இப்படி-

நிறைய முறை

நீ தைரியசாலி என்பதை

புரிய வைத்திருக்கிறாய்

எனக்கு.

எனை சிறு எறும்பு

கடித்து விட்டதற்காய்

ஏன் பதறி

நீ கோழை யானாய்..

 

Widget byLabStrike


11 comments:

  1. adavadu kadhaluku(adhu affection avum iirukalam) kan illai

    ReplyDelete
  2. அருமை. கவிதை ஒரு பெண்ணின் பார்வையிலிருந்து எழுதப்பட்டது என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  3. காதலுக்கு கண் இல்லை..ஆனால் கண்ணும்,கருத்துமானது காதல்.

    ReplyDelete
  4. மிக்க நன்றி..
    ஆமாம் பெண்ணின் பார்வையிலிருந்தே எழுதப்பட்டது நண்பரே.

    ReplyDelete
  5. கடிச்சது எந்த எறும்பு என குறிப்பிடவில்லையே??? :)

    ReplyDelete
  6. ஹா..ஹா..கட்டெறும்பு கடிச்சுடுச்சி..நீ நினைக்கிற எறும்பு கடிச்சா பதற வேண்டியதில்லை..மகிழ வேண்டியதுதான்.

    ReplyDelete
  7. நட்புக்கும் கவிதை மிக அழகாக பொருந்திப்போகிறது. காதலில் காமம் மட்டுமில்லை நட்பு இருக்கிறது போல,..

    ReplyDelete
  8. பெண்ணின் பார்வையில் ஒரு கவிதை..
    நீங்க பெரிய ஆளுங்க..
    வாழ்த்துக்கள் :)

    ReplyDelete