Saturday, October 30, 2010

ப்ளீஸ்..தயவுசெய்து பெண்கள் படிக்காதீங்க..என் அமாவசை இருட்டில் அவள் கவிதையை படித்துவிட்டு

///பெண்களுக்கு ஒரு படைப்பாளி போல்! நம்ம மக்களுக்கு யாரும் அவர்கள் பக்கத்திலிருந்து எழுத வர மாட்டாங்கப்பா!///

என்று நண்பர் prajaraman தனது பின்னூட்டத்தில், ஆண்களின் ஓர் தீராத ஆசையை தெரிவித்திருந்தார்.நானும் நீண்ட நாட்கள் இதுப் பற்றி யோசித்ததுண்டு.ஆண்கள் மாறி,மாறி பெண்களை கவிதையில்,காவியத்தில்,ஓவியத்தில் என ஒரு சேர புகழ்கிறோம்..வர்ணிக்கிறோம்..ஆராதிக்கிறோம்..அர்ச்சனை செய்கிறோமே.ஆனால் நம்ம ஆண் வர்க்கத்தை பெண்கள் அப்படி ஒரு நாளும் வர்ணிப்பதில்லையே!ஆராதிப்பதில்லையே!
கொஞ்சம் வருத்தம் கலந்த விடையம்தான்.பரவால விடுங்க..

ஆண் வர்க்கத்துக்கு ஒரு ஆறுதலான செய்தியை பார்ப்போம்.அவங்க எழுதாட்டியும்,நமக்கு நாமே திட்டம் வகுத்துக் கொள்வோம்.
ஆண்மகன் பெண்களை பின்தொடர்தல் என்பது இயற்கையின் விதியாகிவிட்டது.விலங்கு பறவை இனத்திலும் இதே கதை தான்.எனவே பெண்ணை ,ஆண் ஆராதிப்பது,வர்ணிப்பது என்பதெல்லாம் அதற்குள் அடக்கமாகி விட்டது.பின்னுக்கு செல்பவன் பெண்ணுக்கு வலைவிரிக்க புகழ்கிறான் வர்ணிக்கிறான் அழகி என்கிறான்.அப்படியே காவியம்,ஓவியம்,கவிதை என பின்வரும் காலங்களில் புகழ்ந்தும் அதை நீட்டித்தும் கொண்டான்.
என் தந்தை சில நேரங்களில் இயற்கையின் ஒப்பீடை கீழ்க்கண்டவாறு சொல்வார்..

1.கோழி இனத்துல சேவல்,பெட்டைக் கோழி ரெண்டுல எதுப்பா அழகு? என ஓர் நாள் தீனி உட்க்கொள்ளும் கோழிகளை பார்த்துக் கொண்டே சில கேள்விகளைக்  என்னிடம் கேட்டார் என் தந்தை.
நான் பார்த்து விட்டு சொன்னேன்  சேவல்தான் ஐயா அழகு.(என் தந்தையை ஐயா என்றுதான் நான் அழைப்பேன்)

2.மயில் பாத்துருக்கல்ல?ஆம் என்கிறேன் நான்..அழகு தோகையுள்ள ஆண் மயிலா?இல்லை தோகையற்ற பெண்மையிலா?
இதிலென்ன சந்தேகம் ஆண் மயில்தான் என்கிறது என் பதில்.

3.மான் இனத்துல?
தெரியல என்கிறேன் நான்.
மான் இனத்துல ஆண் மானுக்குதான் கொம்பிருக்கும்.மான் என்றாலே அந்த அழகு மிகுந்த கொம்புதான் நினைவுக்கு வரும்.அதுதான் கலைமான் என்றும் அழைக்கப் படுகிறது..அதிலும் ஆண் மான்தான் அழகு.. இது என் தந்தை கொடுத்த விளக்கம்.

4 .சிங்கத்துல?
நிச்சயம் பிடறியுள்ள ஆண் சிங்கம்தான்.

5 .மாட்டில்?
கம்பீரமான காளைதான்.

6 .ஆட்டில்?
தாடியுள்ள கெடாதான்.

7.யானையில்?
தெரியவில்லை என்கிறது என் பதில்.
ஆண் யானைதான்.வழிநடத்தும் கம்பீரம்.அழகான் தந்தம்..என்கிறார் அவர்..

இப்படியே நீள்கிறது பட்டியல்..(வேணா டிஸ்கவரி சேனல் பாருங்க.உங்களுக்கே தெரியும்)நானும் பல நேரங்களில் யோசிப்பதுண்டு..ஆம் அனைத்து உயிரினத்திலும் ஆண் இனம்தான் அழகாய் தெரியும் போது,மனித இனத்தில் மட்டும் பெண் எப்படி அழகியாவாள்??நிச்சயம் ஆண்தான் அழகானவன்.
ஆண்கள் ஆரம்ப காலத்திலிருந்து விட்டக் கதைகளினாலேயே இடைப் பட்டக் காலத்தில் பெண்கள் அழகி யாக்கப்பட்டுளார்கள்..
இதை எழுதும் போது என் நண்பர் சொல்வதுதான் ஞாபகத்தில் வருகிறது..
தூங்கி எந்திரிச்சு மேக் அப் போடாத பொண்ணு முகத்தைப் பாரு..தேவதையா?ராட்சசியான்னு?தெரியும்பார்.இப்போ புரியுதுல்ல யார் அழகுன்னு..
என்ன ஆண்வர்க்கமே ஓகே வா??இனி பெண்கள் அழகின்னு சொல்லாதீங்க..ஆண்கள் அழகன்னு சொல்லுங்க!!

(ஹீ ..ஹீ..படிச்சுட்டு பொண்ணுங்க டென்சன் ஆகிடாதீங்க..இது ஆண்கள் உரிமையை மீட்டெடுக்கும் சங்கம் சார்பா எழுதினது..மத்தபடி தாய்க் குலத்தை நமக்கு எப்பவுமே ரொம்ப பிடிக்குமுங்க..)

Widget byLabStrike


18 comments:

 1. மத்தபடி தாய்க் குலத்தை நமக்கு எப்பவுமே ரொம்ப பிடிக்குமுங்க.
  --
  இது ஓட்டு வாங்கிற யுத்தி.

  ReplyDelete
 2. ஆண்கள் பெண்களுக்கு அழகை கொடுத்துவிட்டு, சுகந்திரத்தினை பரித்துக்கொண்டார்கள் என புலம்புவாள் என் தோழி. அழகாக இருப்பதற்கு அடிமையாக இருக்கிறோம், அதனால் அழகை வெறுக்கிறேன் என்று மேக்கப் கூட போடாமல் எங்களை பயமுருத்தாதீர்கள் தாய்க்குலங்களே.

  ReplyDelete
 3. this statement o.k.but this is not accepted by all gents.Because gents beatiful competetion is only finalised that.

  ReplyDelete
 4. //(ஹீ ..ஹீ..படிச்சுட்டு பொண்ணுங்க டென்சன் ஆகிடாதீங்க..இது ஆண்கள் உரிமையை மீட்டெடுக்கும் சங்கம் சார்பா எழுதினது..மத்தபடி தாய்க் குலத்தை நமக்கு எப்பவுமே ரொம்ப பிடிக்குமுங்க..) //

  பாதுகாப்புக்கு

  ReplyDelete
 5. // மத்தபடி தாய்க் குலத்தை நமக்கு எப்பவுமே ரொம்ப பிடிக்குமுங்க //

  அதெப்படிண்ணே பேசர வரைக்கும் பேசிட்டு கடைசியா இப்படி ஒரு பிட்டு போட்டுடறீங்க? :) ..

  ReplyDelete
 6. ஹா.ஹா.ஆமாம் நண்பா..எல்லாம் நம்ம அரசியல்வாதிங்க கிட்ட இருந்து கத்துக்கிட்டது.

  ReplyDelete
 7. // இனி பெண்கள் அழகின்னு சொல்லாதீங்க..ஆண்கள் அழகன்னு சொல்லுங்க!! //

  இப்படி சொல்லிட்டு அலைஞ்சா நம்மளைத்தான் லூசுன்னு சொல்லுவாங்க... :)

  வேணும்னா உங்க ஆளுகிட்ட முதலில் சொல்லிட்டு, அதோட ரியாக்சன் என்னன்னு சொல்லுங்க, அத வச்சு நாங்க சொல்லறதா வேணாமான்னு முடிவு பண்ணிக்கறோம்.. :P

  ReplyDelete
 8. ஒரு தற்காப்புக்குதான் நண்பா..

  ReplyDelete
 9. ஆமாம் நண்பரே..ஏற்கனவே பயந்துப் போயிருக்க நம்ம ஆண் வர்க்கத்த இன்னும் கொஞ்சம் பயமுறுத்திடப் போறாங்க..

  ReplyDelete
 10. எல்லாத்துலையும் பிட்டுக்குன்னு ஒரு மதிப்பு இருக்கு நண்பா.. :)

  ReplyDelete
 11. அதனால தான் நண்பா நம்ம மக்கா தெளிவா..நம்ம நலம் கருதி,பிசாசு னு சொல்லாம காதல் பிசாசு,அழகான ராட்சஸி,மோகினிலாம் எழுதி வச்சுருக்காக.நானும் தப்பிகிறத்துக்கு இப்படி பிட்டுப் போட்றது..நீங்களும் ட்ரை பண்ணுங்க.. :P

  ReplyDelete
 12. பெண்கள் கவனத்திற்கு.........

  இவர் ரொம்ப நல்லவர்..........

  நா சொல்லளங்கோ! அவறே சொல்லி கிறாரு!

  மன்னிசிகோ நா !

  ReplyDelete
 13. நண்பா பதிவு சூப்பருங்கோ....(இதை நான் ஒரு ஷாவினிஸ்டா இருந்து சொல்லல. ஒரு நடு நிலையான கருத்தாத்தான் சொல்றேன். அப்பா, சங்க எதிர்ப்புல இருந்து தப்பிச்சாச்சுப்பா.... ;-) )

  //ஆண்கள் ஆரம்ப காலத்திலிருந்து விட்டக் கதைகளினாலேயே இடைப் பட்டக் காலத்தில் பெண்கள் அழகி யாக்கப்பட்டுளார்கள்..//
  இது உண்மையோ உண்மை. ஆனா, பொண்ணுங்க கதைவிடுறதுக்காகக்கூட பெரும்பாலும் அப்படிச்சொல்றதில்லையே?!

  //(ஹீ ..ஹீ..படிச்சுட்டு பொண்ணுங்க டென்சன் ஆகிடாதீங்க..இது ஆண்கள் உரிமையை மீட்டெடுக்கும் சங்கம் சார்பா எழுதினது..மத்தபடி தாய்க் குலத்தை நமக்கு எப்பவுமே ரொம்ப பிடிக்குமுங்க..) //
  ஹி ஹி.... நண்பா, அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா ;-)

  ReplyDelete
 14. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. etha nan epadi misspanninan super

  ReplyDelete