Thursday, October 28, 2010

வார்த்தை வராத தருணத்தில்..


அவள் பனிரெண்டாம் வகுப்பு படிப்பவள்.வயதில் பதினாரைக் கடந்தவள்.பக்குவத்திலும்,பேச்சினிலும்,தெளிவினிலும் வயது நூறைத் தொடுபவள்.வாயாடி,வசீகரப் பேச்சு என என்னிடம் வலம் வருபவள்.பாடல்களில் பல மேடைக்களம் கண்டவள்.அலைபேசி அழைப்பின் முடிவில் எப்போதும் பாற்கடலில் கடைந்து எடுத்ததை என் காதில் பாடலாய் பாய்ச்சுவாள்.அவள் புண்ணியத்தில் அமிர்தம் பருகுவேன் நான்.
இந்த சின்ன வயதில்..ஆஹா..அப்பப்பா..எத்தனை தெளிவு..அறிவு என அப்பப்போ என்னை பெருமூச்சிட செய்பவள் .இப்போ அவள் புதியதாய் கவிதை எழுதவும்,என்னிடம் அதை சொல்லவும் ஆரம்பித்திருந்தாள்.
என்னடி கலக்குற..என்பேன் நான்..பாஸ் எல்லாம் உங்க புண்ணியத்துலதான்.உங்க ப்ளாக் எனக்கு பெரிய எனர்ஜி(இது பாஸ் என்கிற பாஸ்கரன் வறதுக்கு முன்னாடியே கெடச்ச பட்டங்க) ..ஐயோ இவ காமெடி பண்றாளா?கலாய்க்கிறாளா?இல்ல உண்மையிலேயே பாராட்டுறாளா??என எனக்கும் விளங்குறதே இல்ல.ஏன்னா.. நான் கொஞ்சம் முன்னாடி ஜெனரேசன் பாருங்க.
சரி ஏதோ சொல்றா  சந்தோசப் பட்டுப்போமேன்னு நானும் விட்டுறது.
நேற்று சந்தோச மிகுதியில்,அளவில்லா ஆனந்தத்தில் அந்த அலைபேசி அழைப்பு என்னை சந்திக்கிறது..என் காதில் சங்கமிக்கிறது.பாஸ் ஒரு ஹாப்பி நியூஸ் .எங்க வீட்ல கூட இன்னும் சொல்லல..உங்க கிட்டதான் நான் பஸ்ட் சொல்றேன்.இன்னைக்கு நடந்த இன்டெர் ஸ்கூல் காம்பிடீசன் கவிதைப் போட்டில நான் இரண்டாம் பரிசு பெற்றேன் பாஸ்.உங்களுக்குதான் தாங்க்ஸ் சொல்லணும் என்கிறாள் அவள்.
வாழ்த்துகள்..ஏன் எனக்கு என்றேன் நான்.
கவிதை போட்டியோட தலைப்பு கடவுளுக்கு ஓர் கடிதம்னு கொடுத்தாங்க.நான் கடவுளைக் கலாய்ச்சி எழுதிட்டேன்.இலங்கைல இவ்ளோ தமிழர்கள் செத்தாங்களே..ஓசோன்ல ஒட்டையாமே ? நீ எங்கப் போன??கல்லாப் போனவனே!என்கிற ரீதியில் எழுதிக் கொடுத்துட்டேன் பாஸ்.பரிசு கிடைக்காதுன்னு நெனச்சேன்..கொடுத்துட்டாங்க.எல்லாம் உங்க பாதிப்புதான் .
மேடைல மைக் கொடுத்து பேச சொன்னாங்க..நான் உங்களுக்கு நன்றி சொல்லிட்டேன் பாஸ்..என தான் பாஸானக் கதையை சொல்லி முடிக்கிறது அந்த கானக் குயில்..
என் நெஞ்சம் முழுக்க நெகிழ்ச்சி..மனமுழுக்க மகிழ்ச்சி..அருகிலிருந்தால் உமை ஆரத்தழுவி இருப்பேன் தோழி.எம் சிந்தை நிறைந்தேன்.எனக்கூறி முடிக்கிறேன்..வார்த்தை வராத அத்தருணத்தில்..

Widget byLabStrike


12 comments:

 1. வாழ்த்துக்கள் பாலா!
  புதிய கவிதாயீநீ உருவாக்கியதற்கு....

  ReplyDelete
 2. ரொம்ப நன்றி தோழி..
  ஹா..ஹா..அவளுக்குதான் வாழ்த்து சொல்லணும்..என்னையும் ஒரு அறிவாளியா நெனச்சி மேடைல வேற சொல்லிருக்கா..

  ReplyDelete
 3. nandri solla unakku ......... vaarthailla ennakku.................

  ReplyDelete
 4. எப்படியோ ஒரு கவிதாயினிய உருவாக்கிட்டீங்க.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. அப்டியா..அதான் சொல்லிட்டியே.உனக்குதான் இப்போ நான் சொல்லணும்.

  ReplyDelete
 6. நன்றி..
  அப்படி இல்லை நண்பரே..அவள் இயல்பாகவே கவிதாயினி தான்.

  ReplyDelete
 7. நல்ல விஷயம் தான் நண்பா... என் நண்பனை முன்மாதிரியாக கொண்டு, ஒரு கவிதையே இங்கு கவிக்குயில் ஆகி இருக்கிறது...

  நன்பேண்டா !!!

  ReplyDelete
 8. கடவுளுக்கு ஓர் கடிதம் கவிதையை இங்கும் கொடுத்தால் நாங்களும் பாராட்டுவோம்முள்ள,..

  ReplyDelete
 9. ஹா..ஹா..அவ்ளோதானே கொடுத்துட்டாப் போச்சு..

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் குருவுக்கும் சிஷ்யைக்கும்

  ReplyDelete