Sunday, October 24, 2010

வலைப்பதிவு வாசகர்களுக்கு..

அந்தப் பதிவை படித்து முடித்ததும், முதலில் எனக்கு ஏற்ப்பட்டது, நானும் தமிழன் என்கிறப் பெருமிதம்தான்.அது உண்டு பண்ணின நெகிழ்ச்சி அப்படி. நம் உடன்பிறப்பான ஓர் தமிழன் செய்யும் அளப்பரிய சேவை,தன்னிகரில்லாத் தொண்டு தரணிக்கு தெரிந்திருக்கிறது.தமிழனுக்கும்,தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்ந்திருக்கிறது.தமிழ்நாட்டிலுள்ள நமக்கு  தெரிய இவ்வளவு நாட்களாகி இருக்கிறது.இங்கே உள்ள எந்த ஊடகங்களும் அந்த மாமனிதனை அடையாளம் கட்டவில்லை..அதனால் யாம் அறியவும் வாய்ப்பில்லை.அழுக்கடைந்த மனிதரைப் பார்த்தாலே ஆறடி தள்ளி நிற்கும் அழுக்கு உள்ளம் படைத்தோர் நாம்.ஆனால் அரவணைத்து உணவூட்டுகிறது அவரின் தெளிந்த உள்ளம்.மனநிலை,மூளை வளர்ச்சிக் குன்றியவர் நம் குறுகியப் பார்வையில் பைத்தியம்,கிறுக்கு.அந்தத் தமிழனின் அகன்றப் பார்வையில் அன்புக்குரியவர்கள்.

அந்த தமிழனை,தலைவனை பற்றி மேலும் அறிந்து கொள்ள..

தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு!!

2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்

குறிப்பு: பதிவுலகத்துல நண்பர்களுக்காகவும்,நல்லப் பதிவுகளுக்காகவும் ஓட்டுப் போட ஆர்வம் காட்டும் நாம்,இந்த தலையாய தமிழனுக்கோர் ஓட்டிடலாமே!இது ஒவ்வொரு தமிழனின் தலையாயக் கடமை.மறக்காமல் போடுங்கள் ஓட்டு.

http://heroes.cnn.com/vote.aspx


Widget byLabStrike


No comments:

Post a Comment