Wednesday, October 20, 2010

உன்னைப்போல்தான் நானும்!


தள்ளாத வயதின்

இயலாமையில்

தள்ளி வைக்கப்பட்டு

திண்ணையில் கிடக்கும்

முதியவரை பார்த்து..

உன்னைப்போல்தான் நானும்

முள்ளிலிருந்தும்

கல்லிளிருந்தும்

வெயிலிருந்தும்

மழையிலிருந்தும்

மனிதனை காத்தேன்..

இருந்தும்

தேவைக்கு பயன்படுத்திவிட்டு

எமை வீட்டிற்கு

வெளியே விட்டு விட்டு

உள்ளே நுழைகிறான்

நன்றி கெட்டவன்

செருப்பு புலம்பியது...


Widget byLabStrike


No comments:

Post a Comment