Sunday, October 17, 2010

என் பதிவும்,மதவெறியரின் கோபமும்

இன்றையக் காலக்கட்டத்தில் அனைத்து துறைகளையும் கடந்து கணிப்பொறியின் பயன்பாடு அளப்பரியது.நம் பொழுதைப் பெரும்பான்மையாக கணிப்பொறியின் ஊடாகவே கழிக்க வேண்டியிருக்கிறது.வேலையாகினும்,பொழுது போக்காயினும்,செய்திகள் அறிவதாயினும் இன்னும் ஏனைய செயல்பாடுகளுக்கும் கணினியின் செயற்பாடு செயற்கரியது.

முக்கியமாய்..இப்போ மக்களினூடே  அதிகரித்து வரும் வலைப்பூ எழுதும் பழக்கம்.பெரும்பான்மையோர் தமக்கான ஓர் வலைப்பூ பக்கத்தை தேர்வு செய்து எழுதுவதை தம் கடமையாக செய்து வருகின்றனர்.அதில் தங்கள் சொந்த அனுபவங்கள்,கதை,கவிதை,கட்டுரை,தொழில்நுட்பம் என அவரவர்களுக்கு தெரிந்த,அறிந்த,பிடித்த விசயங்களை எழுதியும் பகிர்ந்தும் வருகிறார்கள்.

மேலும் வலைப்பூ என்பது ஓர் தனிமனிதனின் திறமையை வெளிக்கொணரும் களமாக செயல்படுகிறது.முன்னெல்லாம் ஒருவர் தன் தனித்தன்மையை வெளிக்கொணர வெகுஜன ஊடகங்களான நாடகம்,கூத்து,எழுத்து,பத்திரிக்கை,வானொலி,திரைப்படம்,தொலைக்காட்சி என ஏதேனும் ஒன்றை எதிர்ப்பார்த்து தேடிப்போய் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் மட்டுமே திறமையை அரங்கேற்றும் சூழல் இருந்தது.ஆனால் இன்றைய சூழலில் வலைப்பூக்களின் ஊடாக..ஓர் சராசரி மனிதன் கூட தன்னை சாதனை நாயகன் ஆக்கிக் கொள்ள இயல்கிறது.

ஒருவர் என்ன எண்ணுகிறாரோ,இல்லை என்ன எழுத,எதை வெளிப்படுத்த முயல்கிறாரோ அதை எழுதவும்,வெளியிடவும் சுதந்திரம்,களம் கிடைத்திருக்கிறது.தனக்கான ஓர் பக்கம் அமைத்து அதில் தனக்கு தெரிந்ததை ,தாம் அறிந்ததை எழுதி தம்மை செம்மையாக்கிக் கொள்ள முயல்கிறார்கள்.

கதை,கவிதை,கட்டுரை என அவரவர்களுக்கான பாணியில் ஒவ்வொருவரும்  எழுதுகிறார்கள்.இதை இப்படித்தான் எழுத வேண்டுமென்ற எந்த இலக்கண வரையறைகளும் இங்கு இல்லை.வரையறைகளுக்கு உட்பட்டது எங்கும் வளர்வதும் இல்லை.ஓவியத்துறையில் எப்படி இசங்கள் மாறினவோ,திரைத்துறையில் எப்படி நான் லீனியர் வந்தனவோ,அதுப்போன்று இலக்கியத்துறையில் மரபுக்கவிதை புதுக்கவிதையானது,புதுக்கவிதை ஹைக்கூவானது என பரிணாமம் மாறிக்கொண்டு தானிருக்கும்.அவ்வாறே தற்போது வலைப்பூக்களிலும் கவிதையின் வடிவங்கள் மாறி ஒவ்வொருவரிடமும் ஓர் பாங்கு அல்லது பாணி தெரிகிறது.

ஆனால் அறியாமையில் இன்னும் சிலர் இது மரபு,இதை இப்படித்தான் செய்யவேண்டும்.அறியாமல் நீ இப்படி எழுதுகிறாய்.நீ எழுதுவதற்கு தகுதியற்றவன் என்கிற ரீதியில் ஏதோ தாம் வள்ளுவனைப் போலவும்,கம்பனைப் போலவும் கற்பனை செய்து கொண்டு அடுத்தவனுக்கு அறிவுரை மன்னிக்க அடுத்தவரின் எழுதும் ஆர்வத்தை குறைத்து,இழிவுப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

அதற்காக கருத்துக் கூறுவதோ விமர்சனம் செய்வதோ தவறு என்றுக் கூற நான் முன்வரவில்லை.ஒருவர் சொல்கின்ற கருத்து நியாயமானதாகவும்,அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும்,செம்மைப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்.

ஒருவர் மனதை புண்படுத்தும் நோக்கத்திலோ, தனிமனிதர் மீதுள்ள தனிப்பட்ட வெறுப்பை உமிழ, தன் தனிப்பட்ட காழ்ப்புண ர்ச்சியைக் காட்ட மட்டுமே பயப்படுத்தக் கூடாது.அவ்வாறானவர்கள் அறிவுரை சொல்லவோ கருத்துக் கூறவோ தகுதியற்றவர்கள்.

அப்படித்தான் நேற்று நான் எழுதிய "அழுக்கான சமுதாயம்" என்ற கவிதைக்கு பின்னூட்டமிட்ட ரமணன் என்பவர்

"வாக்கியத்தை மடித்து எழுதினால் அது கவிதை ஆகாது . என்ன சொல்ல வருகிறீர்கள் ? வீடும், ஆயுதங்களும் அழுக்காக இருக்க வேண்டுமா ? சமுதாயத்தை சீர் திருத்துவதற்கு எளிய வழி தனி மனித ஒழுக்கம் . புரட்சிக் கவிதை என்ற பெயரில் உரை நடை எழுதுவது கவிதையும் இல்லை ,சமுதாயதிற்கு அதனால் பயனும் இல்லை . தமிழில் கவிதை எழுதப் பழகுவது நன்று. இயலவில்லை எனில் ,ஒதுங்குவது தமிழுக்கு நல்லது ".

என்று என்மீது ஓர் கவிகுற்றசாட்டை முன்வைத்துள்ளார்.இந்தப் பின்னூட்டத்தை கண்டுகொள்ளாமல்,என்னால் புறந்தள்ளி போயிருக்க முடியும்.ஆனால் இதுப்போன்ற ஆட்களால்,கவிதைகளைப் பற்றிய தவறானக் கணிப்பு,வலைப்பூவில் கவிதைகளை எழுத வந்திருக்கும் புது கவிஞர்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்தப் பதிவை எழுதும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன்.

சரி அவர் என் மீது சுமத்தியிருக்கும் குற்றசாட்டைப் பார்ப்போம்.

//"வாக்கியத்தை மடித்து எழுதினால் அது கவிதை ஆகாது .புரட்சிக் கவிதை என்ற பெயரில் உரை நடை எழுதுவது கவிதையும் இல்லை ,சமுதாயதிற்கு அதனால் பயனும் இல்லை . தமிழில் கவிதை எழுதப் பழகுவது நன்று. இயலவில்லை எனில் ,ஒதுங்குவது தமிழுக்கு நல்லது " //

முதலில் கவிதை என்றால் என்ன?.இவர் கவிதை என்று எதை விளைகிறார்?மரபுக்கவிதை மட்டுமே கவிதை என்கிறாரா?கவிதையைப் பற்றி குறைகானுவதற்கு முன் மரபுக்கவிதை,புதுக்கவிதை,ஹைக்கூ போன்றவற்றைப் படித்து கவிதைகள் என்றால் என்ன என்பதை இவர் தெரிந்து கொள்ளட்டும்.

காலத்திற்கும் ,பேச்சுவழக்குக்கும்,மாறிவரும் நாகரீகங்களுக்கும் ஏற்ப எழுத்தும் மாற்ற மடையும்.மரபும் மாறும்..அவ்வாறே மாறியும் வந்துள்ளது.எந்த ஒரு இலக்கியத்தையும் இலக்கண வரையறைக்கு உட்படுத்த முடியாது என்பதே நிதர்சனம்.மேலும் என் கவிதை பற்றிய விமர்சனத்தில் ரமணன்

"என்ன சொல்ல வருகிறீர்கள் ? வீடும், ஆயுதங்களும் அழுக்காக இருக்க வேண்டுமா ? "-என வினவியிருந்தார்..

வீடும் ,ஆயுதங்களும் அழுக்காக இருக்க வேண்டும் என்பதில்லை என் கருத்து..தினமும் அதை சுத்தப் படுத்து,தூய்மையாக வை.அதற்கு முன் உன் உள்ளத்தை தூய்மையாக்கு.சமுதாயத்தில் உள்ள பிற்போக்குத்தனமான அழுக்குகளை நீக்கு என்பதே என் கவிதையின் சாரம்.இதைப் படித்துப் பார்த்தால் பிறந்தக் குழந்தைக் கூட அதன் சாராம்சத்தை உணரும்.ஆனால் ரமணன் அதன் சாரம் உணராமல் ஏதோ பிதற்றி இருக்கிறார்.

சரி விசயத்துக்கு வருவோம்..

எமக்குதான்  தமிழ் எழுத வரவில்லைப் போலும்..அந்த ஆசானிடம் நாம் கேட்டாவது தமிழ் கற்றுக்கொண்டு இனி பதிவெழுதலாம் என யோசித்து அவர் வலைப்பூவை திறந்து பார்த்தேன்.ramanan50'blog இதுதான் அவரின் வலைப்பூ பெயர்.ஆங்கிலத்தில் பதிவெழுதும் இவர் நமக்கு அறிவுரை சொல்லவும்,ஆசானாகவும்  முயற்சித்திருக்கிறார்.

அப்போதான் எனக்கு விளங்கிற்று..இவரின் கோபம் என்மீதோ,என் எழுத்துக்களின் மீதோஇல்லை.நான் எழுதியக் கவிதையின் கருத்தின் மீது கோபம் கொண்டிருக்கிறார்.ஆம்..இந்த ரமணன் , மக்களை மூட நம்பிக்கைக்கு உள்ளாக்கும் ஓர் மதவாதி.மேலும் எட்டு ஆண்டுகள் வேதங்களையும்,இந்துமதப் புத்தகங்களையும் படித்துள்ள ஓர் மத வெறியர்.அதனால் ஆயுதபூஜைக்கு நான் எழுதியக் கவிதையின் சாரத்தை அவரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.அந்த வெறியின் வெளிப்பாட்டையே பின்னூட்டமாக எழுதியும் இருக்கிறார்.இவர்களுக்கெல்லாம் நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான்.

இதப்படிங்க மொதல்ல..

வாசகர்கள் சரஸ்வதியையே கேட்கட்டும்.

மதமும்,மயிரும் ஒன்னு..
Widget byLabStrike


No comments:

Post a Comment